குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Monday 31 October 2011

தமிழின் தரமும், தமிழரின் தரமும் - கூட்டஞ்சோறு

சொல்லை  ஆள்பவன் ,எழுத்தை ஆள்பவன் எழுத்தாளான் ஆகிறான் ".எல்லா சொல்லும் பொருள் குறிப்பிடுவனவே  " என்பது தொல்காப்பியம் . சொல் சுடும் ,சொல் எறிக்கும், சொல் கொல்லும்.சொல் எல்லாம் செய்யும்.

 தமிழில் எந்த வகை எழுத்து ஆனாலும் ,கதை,கவிதை,கட்டுரை,வரலாறு,சமூகம்,இவை தவிர வேறு பல தளங்களில் இருந்தாலும் தமிழில் வெளி வந்த , வெளி வர போகின்ற எந்த வகை இலக்கியம் ஆனாலும் எல்லா காலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். இந்த பதிவு பல எழுத்தாளர்களின் படைப்புக்களை ,நான் மற்றும் பலரும் விரும்பி படித்த அல்லது வாழ்ந்த படைப்புகளின் தொகுப்பாக செய்யலாம் என விரும்பியுள்ளேன். அதற்கு கூட்டஞ்சோறு என தலைப்பிட்டு பதிவு போடலாம் என நினைத்தபோது ,ஒரு சின்ன கதை நினைவிற்கு வந்தது .அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


உலக நாடுகளை எல்லாம் சுற்றி பார்த்து வந்தார் ஒரு அன்பர். சுற்றி பார்த்த பிறகு வந்ததால் அவர் சொன்னார்.அய்யா பிரான்சு,ரஷ்யா,ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடைதெருவுகளில் நடக்கிறப்போ ,அந்தந்த நாட்டின் தெரிகிறது.அனால் தமிழ் நாட்டின் கடைதெருவில் நடக்கும்போது தமிழ் நாடு தெரியவில்லை ,இங்கிலாந்து தான் தெரியுது என்றார்.

ஏன் அப்படி 

எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆங்கிலத்தில் தானே பெயர் பலகை கண்ணில் படுத்து, தமிழில் யாரும் எழுதிவைக்கவில்லையே ,என தலை குனிந்தவாறு சொன்னார்.

அய்யா குனியதீர் ,நிமிரும்

இன்னொரு நண்பர் சொன்னார்,அமெரிக்காபோயிருந்தேன் ,நயாகரா நீர் வீழ்ச்சிக்கு போய் பார்த்தேன்.அங்கே முகப்பிலே நல்வரவு என எழுதியுருந்தது.இங்கே ஏன் இப்படி தமிழில் எழுதி உள்ளீர்கள் என கேட்டேன்  " உலகத்தின் மூத்த மொழி தமிழ், உலகத்தில் உயர்ந்த மொழி தமிழ்,உலகத்தின் உயர்ந்த நீர் வீழ்ச்சி அதனாலே "
ஜப்பானிய  பல்கலைகவாயில் முகப்பில் " யாதும் ஊரே ,யாவரும் கேளிர் "என்கிற சங்கத்தமிழ் பாடல் வரியை மொழிபெயர்த்து எழுதி வைத்துள்ளர்கள்.

    ஜெருசலம் நகரில் உள்ள ஒரு மலையில் யோசு கோவில் ஒன்றில் ,யோசு கற்பித்த வழிபாட்டின் கருத்து உலகினிலே உள்ள 68 மொழிகளில் எழுதி உள்ளனர்.அதில் இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே.

திருக்குறள் படித்த பிறகு நான் தமிழனவே பிறக்க விரும்புகிறேன் - காந்தி 


தமிழ் - உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி.தோன்றிய இடம் குமரி. அங்கிருந்து தான் பல நாடுகளுக்கும் குடியேறின.ஆங்கில புலமையாளர் g .u .போப் இப்படி கூறுகிறார்.

 மங்கோலிய சீன மொழிக்கும் ஒற்றுமை உண்டு.ஈரோப்பிய மொழிகளுக்கும் தமிழ் மொழிக்கும் நெருக்கம் உண்டு

இப்படி பல உண்மைகள் ( கூறியவை சில  பதமே ) இருப்பதால் ,தமிழை தாய் மொழியாக கொண்ட நானும் கர்வத்துடன்,பெருமையுடன்,இந்தப் பதிவை தொடரலாம் என எண்ணுகிறேன் 

தாங்கள் படித்ததையும் என்னிடம் பகிர்ந்து கொண்டால் அதை நான் பல பேரிடம் பகிர்வேன்.


 உண்மையுடன்
  அவனிசிவா






























































Saturday 29 October 2011

நச்சுன்னு நாலு விஷயம் உள்ள படங்கள்

வணக்கம்


ஒரு வாரத்திற்கு பிறகு பதிவு போடறதல சிலபல  விஷயங்கள் விட்டுப் போச்சு.முக்கியமா எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.நானும் ஏழாம் அறிவு,வேலாயுதம் ,ரா ஒன், இப்பிடி தீபாவளி ரீலீஸ் படங்களை பார்த்து ஏதோ நமக்கு தெரிஞ்ச அளவிற்கு விமர்சனம் எழுதலாம் அப்பிடின்னு நெனைச்சு போனா விலைய கேட்டதும் இந்த விமர்சன வேலையும் வேணாம், எழுதி வேற எவனாச்சும் எதாவது சொல்ல வேற வினையும் வேணாம் அப்பிடின்னு முடிவு செஞ்சதுல படிக்கிற உங்களுக்கு சந்தோசமா இருக்கும் . அதுக்காக விட்டுற முடியுமா , நானும் நாலு படத்த காட்றேன் பாருங்க ,இது ஓடுற படம் இல்ல ,நிழல் படம் தான் , ஆனா நிதர்சனமா நல்ல விஷயம் இருக்கும்.

முதல் படம்

தீபாவளி    பொங்கல்  ,ரம்ஜான்,வருசபிறப்பு ( தமிழ் ) புத்தாண்டு( இது ஆங்கிலம் ) இப்படி பொது விசேசம் ஆனாலும்,கல்யாணமானாலும் ,கருமாதி ஆனாலும், அரசாங்கத்திற்கு வட்டி கட்டுறதே நமக்கு வேலைய போச்சு .ஒரு அளவுக்கு மேல ஓவரா போச்சுன்னா இப்படி தான் இருக்கும், இப்படி தொங்க விட்ருவாங்க , 






அப்பிடியும் தாக்கு புடிச்சிங்கன்ன இப்படி நமக்கும் இவருக்கும் வித்தியாசம் இல்லாம போயிரும் .



ரெண்டாவது படம்

முதல் படத்துல அரசுக்கு வரி கட்டுனோம் இல்லையா, ஒரு அளவுக்கு மேல அடிமை யாரது , குடிக்க மட்டும்  இல்ல  ,அடிக்கவும் தான்  , பாத்ரூம்  போய், ஆய்  வரதுக்கு  ,தம் அடிச்சாங்க  , படிச்சவங்க  அங்க  போய் எதையோ  படிச்சாங்க  , இப்போ  அதயும்  மீறி  எத  கொண்டு  போறாங்க  பாருங்க  ,



மூணாவது  படம் 


வசனமே  இல்லாம படம்  வருது   இல்ல  , அந்த  வரிசையில  எழுத்து  மட்டும் உள்ள படம் . எப்படி லீடர்  உருவாகனும்  பாருங்க 



நாலாவது  படம் 


நமக்கு எந்த மாதிரி  படம் வந்தாலும் அந்த மாதிரி வந்த தான் நல்ல இருக்கும் ,
கீழ போட போற படத்த பார்க்க ஆவல இருப்பிங்க  . பாருங்க இதான்





நல்ல கருத்துள்ள  படமா இருக்கா , வேற  என்ன 

மீண்டும்  சிந்திப்போம் 

உண்மையுடன் 

அவனி  சிவா 




Saturday 22 October 2011

காணாமல் போன காங்கிரசும் ,தொலைந்துபோன இன்னபிற கட்சிகளும்

வணக்கம் 


தேர்தல் முடிவு எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சி பிச்சி மேஞ்சிருப்பிங்க .நம்ம மக்களை என்ன சொல்றதுன்னே தெரியல்ல. கண்ண மூடிகிட்டு இப்பிடியா ஒரே எடத்துல குத்துவாங்க. வச்சா குடும்பி ,செரச்சா மொட்டை  பழமொழிய காப்பதிட்டாங்க.இப்பிடி சொல்றதுனால நான் ஆளும் ஆட்சிக்கு புடிக்காத ஆளு கெடையாது, எதிர் கட்சிக்கு பிடிச்ச ஆளும் கெடையாது.மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு அப்படி ஏத்துகிட்டு , வந்தவங்களுக்கு வாழ்த்தும்,வராதவங்களுக்கு வாய்ப்பும்  கிடைக்க வாழ்த்து.


ஒரு கட்சி ஜெயிக்கிறது,தோற்கிறது சகஜம் தான்,ஆனா இந்த முறை நாங்க தான் மார்தட்டி சொன்ன கட்சிகளோட நெலமைய வரிசையா  பாருங்க

1 . காங்கிரஸ்

      தங்கதமிழன் தங்கபாலு தலைமையில் தனித்து ( எத்தன த ) இனி எந்த தேர்தலிலும் தனித்தே நிற்போம் என உறுதி கொண்டு ( எல்லா கோஷ்டியும் ஒரே முடிவு வேற ) போட்டி போட்டாங்க. ஊராட்சி லெவல்ல கூட அகில இந்திய காங்கிரச தேட வேண்டி இருக்கு .மாநகராட்சியில் அவங்கள பாருங்க .

திருச்சி: விஜயா (காங்.) - 15,387 (டெபாசிட் இழப்பு)
ஈரோடு: ராஜேஷ் (காங்.) - 6,196 (டெபாசிட் இழப்பு)
வேலூர்: தேவி (காங்.) - 3,454 (டெபாசிட் இழப்பு)
தூத்துக்குடி : சத்தியா வயலட் லில்லி (காங்.) - 6,485 (டெபாசிட் இழப்பு)
நெல்லை: ஜூலியட் பிரேமலதா (காங்.) - 8,456 (டெபாசிட் இழப்பு)

இனி காங்கிரஸ் அவ்வளவு தானா (  வருஷம் மத்தியபதவிகாலம் )


------------------------------------------------------------------------------------------------------------------


2  தே.மு.தி .க

     மக்களே இப்படி தான் எல்லா பிரசாரத்திலும் அவர் பேச்சை ஆரம்பிச்சார். நான் வந்தா நல்லது நாலு பண்றேன் அப்படி சொல்லணும் , போற எடத்துல எல்லாம் அவங்க இப்படி,இவங்க இப்படி கை நீட்டி பேசினார் .இப்போ கம்பிய
பலமா சொருகிட்டங்க. இப்படி தான் பேசினாரு பாருங்க ( பவர் ஸ்டார் ரசிகர்கள் மன்னிக்க )



காங்கிரசா, இவங்களா அப்படின்னு பார்தோம்ன ,டெபாசிட் போன கட்சி காங்கிரஸ் அப்ப்டின்ன ,இவங்களும் சளைக்கல்ல . மதுரையில 72 வார்டு இருந்தோப்ப 9 பேரு, 100 ஆன பிறகு 0 .

சுதாரிக்கணும் நல்லதம்பி.

--------------------------------------------------------------------------------------------------------------

3  பா,ம.க.,வி.சி ,புதிய தமிழகம் இன்ன பிற கட்சிகள் 

    தொழிலாவே கட்சிய நடத்தி அப்போப வருமானம் பார்த்து வந்தாங்க ,இனிமே தொழில பங்கு போடா முடியாதுன்னு தனியா கடை போட்டாங்க .வசமா வச்சாங்க பாருங்க ஆப்பு . இவங்க புள்ளி விபரம் கூட கொடுக்க முடியல அப்பிடி ஒரு விஸ்வ ரூப வெற்றி .பேசாம கட்சிய கலைச்சிட்டு தொழில பார்க்க போங்கப்பா. இப்பிடியே உங்க  நெலமை போச்சுன்னா


4 .தி.மு.க.


  அரசியல் சாணக்கியர் சருக்கிட்டார் .அம்புட்டுதான் வேற என்ன சொல்ல 5 வருஷம் மறுபடியும் எழுத்கிட்டே இருக்கணும். அதுக்குள்ள எதெது மொளைக்குமோ.




5 .ம.தி.மு.க

      இவரை பத்தி சொல்லனம்ன இவர் தான் இந்த தேர்தலில் உண்மையான வெற்றியாளர் .


அரசியல் பதிவு எழுதற பதிவர்கள் தப்பு ,தவறு இருந்த தண்டிக்கலாம் .நேர்மையான வார்த்தைகளில்,சரியாய் இருந்தா சரி,சரி

உண்மையுடன்
 
அவனி சிவா







Friday 21 October 2011

ஆடி வந்த , ஆடி அமாவசை நினைவுகள் - பக்தியையும் தாண்டியது




வணக்கம்

 பதிவு எழுத எத்தனையோ விஷயம் இருந்தாலும் , நாம் எழுதிய சில எழுத்துக்கள் படிக்கும் போது ஒரு பரவசம் ஏற்படும் . இந்தப் பதிவு நான் எழுதிய பதிவையே திருப்பி வேறு ஒரு தலைப்பில் இடுகிறேன் . இதனின் லிங்க் கொடுத்தால் பார்த்து படிக்க உங்களின் இதயம் இடம் கொடுத்தாலும் மனம் கொடுக்காது. எனவே அதனை அப்படியே கொடுக்கிறேன். படித்தப் பாருங்கள் .நிறைவாய் இருந்தால் மகிழ்ச்சி . இல்லாமல் போனாலும் மகிழ்ச்சி.இந்தப் பதிவு எழுதிய காலம் சென்ற வருடம் அக்டோபர் மாதம்.




எங்கள் வீட்டிலிருந்து மீனாக்ஷி கோவிலுக்கு பேசிக் கொண்டே நடந்தால் கூட பத்து நிமிடங்களில் சென்று விடலாம்.அவ்வளவு அருகில் வீடு இருந்தது .பண்டிகை காலத்திலும் , செவ்வாய் ,வெள்ளி போன்ற நாட்களிலும் ,தெருவின் முனையில் பிள்ளையார் இருந்தாலும்,அவரை பார்த்து விட்டு கோவிலுக்கு செல்வது வழக்கமாகி இருந்தது.என்னுடைய பால்ய வயதில்.அப்போது எல்லாம் தெருவில் இருக்கும் பெண்கள் அனைவரும் தினமும் செல்வது ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தார்கள்.


அப்போது சிறுவர்கள் நாங்களும் அடிக்கடிசென்று வருவோம் .அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசையின் அன்று கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் அதிகாலையில் நீராட போவோம்.எங்கள் வீடு அருகில் இருந்த காரணத்தினால் தொடர்ந்து சில வருடங்கள் சென்று குளித்து வந்தோம் .அந்த நாட்களில் மதுரையின் பல பகுதிகளில் இருந்தும் ,அருகில் இருக்கும் ஊர் மக்கள்,அந்த நாளில் நீராட வேண்டும் என்பதற்காக மதுரை அல்லாத பல ஊர்களில் இருந்தும் வருவார்கள்.

எங்களுக்கு அது ஒரு விஷேச நாட்களை அமைந்தது.தெருவில் இருக்கும் எங்கள் நண்பர்கள்,சுற்றத்தில் இருப்பவர்கள்,சொந்தபந்தங்கள் அனைவரும் கூடிவிடுவோம்,காலை நான்குமணிக்கு எழுந்து விடுவோம் .எங்களை கூட்டி செல்ல பெரியவர்கள் சிலரும் எங்களுடன் வருவார்கள்.பனி எவ்வளவு பெய்தாலும் ,அங்கு சென்று குளித்து வந்தோம்.எங்களுக்கு அது ஒரு சின்ன சுற்றுலா போல இருக்கும்..கோவிலை சுற்றி பிறகு வந்து சாப்பிடுவோம்.அது ஒரு ஏகாந்த காலம்.அப்போது இருந்த குளத்தை பாருங்கள்.




இன்று காலை கோவிலுக்கு சென்றிருந்தேன் .இடையில் பல முறை போயிருந்தாலும் இன்று தான் இரண்டு மணி நேரம் இருந்தேன்,இன்று வெள்ளியாக இருந்தாலும் ,கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.தரிசனம் முடித்து வந்து குளத்தில் அமர்ந்தேன்.பொற்றாமரைகுளத்தை பார்த்தப்போது வருத்தமாக இருந்தது .குளத்தில் தண்ணீர் இல்லை .குளிக்க மட்டும் காலை கூட நனைக்கமுடியது.சுற்றிலும் கம்பி போட்ட வேலிகள். மதுரையை தவிர்த்து தமிழ் நாட்டின் ,இந்தியாவின் ஏன் உலகில் பல பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு அந்த குளம் நினைவுப் புகைப்படம் எடுக்க மட்டும் பயன் படுகிறது .அவர்களை போல் நாமும் எத்தனை இழந்திரிப்போம். 


எதைப் பெற்று இதை இழந்தோம் , இப்போது அந்த குளத்தை பாருங்கள்




பால்ய நினைவுகளை மீட்டு கொடுத்த இந்த குளத்திற்கும் உயிர் இருப்பதாகவே கருதுகிறேன் .



மீண்டும் சிந்திப்போம்.


உண்மையுடன்

அவனி சிவா


Thursday 20 October 2011

படம் பாருங்க - சிரிச்சாலும் சரி சிந்திச்சாலும் சரி

இந்தியாவை தலை கீழாக மற்றப் போகும் நம் நம்பிக்கை தலைவர் கபில்சிபல் 


 மொதல்ல கொடிய சரியாய் வைப்பா ,பச்சை கீழ வரணும்.

----------------------------------------------------------------------------------------------------------------

 பகுத்தறிவு பகலவன் வீட்டில் பரபரப்புடன் நடக்கும் பூஜை 




 கடவுள் இருக்காரா, இல்லையா தெரியல்லப்பா

 ----------------------------------------------------------------------------------------------------------------

 கூட்டணி எப்படி இருக்கணும் தெரியுமா ( நம்ம அரசியல் தலைகளுக்கு )



 பார்த்து தெரிஞ்சனுக்கணும் , பட்டு இல்ல ,புரிஞ்சதா 

 ------------------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு பொண்ணு இருக்கா அப்ப கட்டாயம் இத பாருங்க




இது எப்பிடி இருந்தாலும் நீங்க இப்படி தான் சீரியசா இருக்கணும் ஆமா





--------------------------------------------------------------------------------------------------------------


உங்க பொஞ்சாதியா எங்க கூட்டிட்டு போனாலும் பத்திரமா பார்த்து வச்சிக்கணும். ஒரு நாட்டு அதிபருக்கே இப்படின்னா நாம் எம்மாத்திரம்.

-------------------------------------------------------------------------------------------------------------


அவ்வளவு தான் படம் முடிஞ்சு போச்சு இன்னைக்குப்பா, ஏதாவது கரு ---த 
 போடுங்க 


உண்மையுடன் 

அவனி சிவா

Tuesday 18 October 2011



படிக்க வேண்டிய பதிவர்கள் - 3

வணக்கம்,

பதிவிற்கு பின்னூட்டம் இட்டவர்களுக்கும், என்னுடன் இணைந்த நண்பர்களுக்கும் வேறு என்ன ,நன்றி


படிக்க வேண்டிய பதிவர்கள் - 2 ல் எழுத்தாளர்களின் வரிசை பதிவு செய்திருந்தேன் . அந்த இலக்கிய வரிசை மிகப் பெரிய பாராட்டுக்கள் பெற்றன.
அந்த வரிசைகளை திரு. மாதவராஜ் அவர்களின் அழியாச்சுடர் முகப்பு பக்கத்தில் இருந்து அப்படியே உங்கள் பார்வைக்கு பதிவு செய்திருந்தேன். அந்த பாராட்டுக்கள் அனைத்தும் அவரையே சாரும்.
.
படிக்க வேண்டிய பதிவர்கள் வரிசையில் மிகப் பெரிய இலக்கிய பெட்டகமான அழியாச்சுடரை பதிவு செய்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சென்று பாருங்கள் கண்டிப்பாய் மகிழ்வீர்கள்.

அடுத்து

லக்கிலுக்ஆன்லைன் .யுவகிருஷ்ணா பல வருடங்களாக பதிவு எழுதி வருபவர். இவர் ஒரு பத்திரிக்கையாளரும் கூட ,சுஜாதா அவர்களின் கையால் சிறந்த பதிவராக அங்கீகாரம் பெற்றவர். எந்த வடிவமான எழுத்தையும் சிறப்பான நடையில் எழுதி வருபவர். இவர் எந்த ஒரு திரட்டியிலும் இணைப்பதில்லை என எண்ணுகிறேன். அதுவே இவரின் வெற்றியாகவும் இருக்கலாம். அனைத்து தளங்களிலும் இவர் இயங்குவது மேலும் ஒரு சிறப்பு. இவரின் பக்கங்களில் போய் பார்த்தால் இவரும் சில பதிவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து படித்து வந்தால் தெரியும் என எண்ணுகிறேன் .இவரின் எல்லா பதிவின் முடிவில் அந்த பதிவின் தன்மை எப்படி உள்ளது என கருத்துக்கள் பெட்டி வைத்துள்ளார். அதனடிப்படையில் நன்று.

இவர் கண்டிப்பாய் இப்போதைக்கு பதிவுலகில் ஆளப்பிறந்தவர்.


எழுதும் முறைகளில் ஏதாவது மாற்றம் எண்ணினாலும் , அதே வேளையில் உங்களுக்கு அறிந்த நல்ல பதிவர்கள் ( நல்ல என்றால் சுயமுடன் மட்டும் எழுதுவது ) என்று தெரிவித்தால் நானும் படித்து மகிழ்வேன். மேலும் பலரும் படித்து மகிழ வாய்ப்பு உள்ளது.


அடுத்த படிக்க வேண்டிய பதிவர்கள் பதிவிற்கு முன் என் பதிவை இடலாம் என நினைக்கிறேன். உங்களின் ஆலோசனை குறிப்பிடலாம்.


உண்மையுடன்,

அவனி சிவா

8likes
2/3


8 comments:

ரஹீம் கஸாலி said...
அருமையான தேர்வு. வாழ்த்துக்கள்
Avani Shiva said...
//ரஹீம் கஸாலி said...அருமையான தேர்வு. வாழ்த்துக்கள்//கருத்துக்கும்,பகிர்வுக்கும் நன்றி
Minmalar said...
அழியாசுடர்கள் நிச்சயம் போற்றப்படவேண்டியபதிவர்
MANASAALI said...
i like luckylook. Not only in comics. In blog also.
shortfilmindia.com said...
்நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்.கேபிள் சங்கர்
♔ℜockzs ℜajesℌ♔™ said...
நல்ல பதிவு . . யுவா ஒரு நல்ல பதிவர் . நானும் தொடர்ந்து படிக்கிறேன்
Anonymous said...
He is third rated politician who can suck anyone's dick for his survival. The worst opportunist bastard ever existed on the Tamil blogdom
Anonymous said...
It is no wonder sycophants like a guy who changes his pants depending on whom he wants to curry. If you all are naked he has his loin cloth. That's the different. he threw Dravidan philosophy for the bones the bramins throw to him. he changed his name to satisfy Brahmins. No wonder self promoting like Cable Sanker

கந்தசாமி கார்னர்

இன்னக்கு ஒன்னும் சூடான மேட்டர் ஒன்னும் இல்லததனால எல்லாமே கந்தசாமி கார்னர் தான். வாங்க, வாங்க 


  இது சும்மா ஒரு அதுக்கு

  ஒரு பொண்ணுக்கு 10 ,000 ரூபாய் தேவை பட்டுச்சு, என்னவென செய்ய தயாரா இருந்துச்சு ,நம்ம கந்தசாமி அவ கிட்ட போய் ,நான் ஒரு 10 முத்தம் தர்றேன் , அப்புறம் நீ கேட்டது தரேன் அப்படின்னார்.அவ்வள தான குடுத்துக்கோ அப்பிடின்னு சொல்லவும் ,மொத முத்தம் கொடுக்கிறப்ப பயமா இருக்கு ,அட ஒன்னும் பயப் படதேன்னு தைரியம் கொடுத்துச்சு , அப்பிடியே ஒவ்வரு முத்தம் கொடுக்கும் போது இதையே சொல்ல , அவளும் தைரியம் சொல்ல , கடைசி முத்தம் முடிஞ்சதும் , சரி எதுக்கு இப்படி பயப் படுறே அப்படின்னு கேட்டாங்க, அது ஒன்னும் இல்ல அந்த ரூபாய எப்படி ரெடி பண்றது ,அப்டிங்கிற பயம் தான் . எப்பிடி நம்ம கந்தசாமி .





கந்தசாமியின் தத்துவம்.

௧. விக்கல் வந்தால் யாராவது நம்மை நினைப்பார்கள்

     சிக்கல் வந்தால் எல்லோரும் நம்மை மறப்பார்கள்

௨. வயிற்றை கலக்கி வாய் வழி வந்தால் அது வாந்தி 

      வாய் வழி வந்து வயிற்றை கலக்கின அது வதந்தி

௩. நடக்க நடக்க கொழுப்பு குறையும்
    
      பேச பேச வாய் கொழுப்பு குறையாது

------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவில எத்தனை மதம் இருக்குனு தெரியுமா ( தோரயமா ) பாருங்க




-----------------------------------------------------------------------------------------------------------------

  ABCDEFG   - இதோட  விரிவாக்கம் தெரியுமா

  A Boy Can Do Everything For Girl 

  
 GFEDCBA   -   இதோட விரிவாக்கம் தெரியுமா

  Girls Forget Everithing Done & Catches New Boy Again
 
---------------------------------------------------------------------------------------------------------------


  தம் அடிக்கிறது எப்படின்னு நம்ம மாமா சொல்லிக் கொடுக்கிறாரு பாருங்க

 


---------------------------------------------------------------------------------------------------------------

 நல்ல இருந்த கமென்ட் போடுங்க

 இல்ல கருத்த போடுங்க


  உண்மையுடன்

  அவனி சிவா





Saturday 15 October 2011

எல்லாம் பழரசம்

௧ . facebook மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமா இதோ வழிமுறை 




௨. ஐந்து நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

                               

     dmdk  -  கேப்டன் கொதிப்பு

     admk  -   விலையில்ல மின்விசிறி ரத்து

     dmk    -   கழக ஆட்சியில் குடிமக்களை இப்படி தவிக்கவிட்டது கிடையாது 

     pmk    -   ஐயோ வடை போச்சே

மக்கள் -    ஓட்டுக்கு துட்டு எங்கப்பா 

 ௩  .  கந்தசாமி கார்னர் 

          நம்ம கந்தசாமி ஒரு பார்வை இழந்த பெண்ணை காதலிச்சார்.அந்த பெண்ணும் அவரை காதலிச்சாங்க , என்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னங்க.சரி அப்பிடின்னு அவரோட கண் ஆபரேசனுக்கு ஏற்பாடு பண்ணினார் . ஆபரேசன் முடிஞ்சு அவருக்கு கண் தெரிஞ்சது , கந்தசாமிய பார்த்துட்டு இவருக்கு பார்வை இல்லையா என கல்யாணம் செய்ய மறுத்துட்டார் .
                          

கந்தசாமி அந்த எடத்துல இருந்து கிளம்பினார் . போனவரு திரும்பி அவரோட காதலிகிட்ட அந்த கண்ண மட்டும் பத்திரமா பார்த்துக்க என்றார்.



மீண்டும் சிந்திப்போம் 


அவனி சிவா 


Thursday 13 October 2011

கந்தசாமியும், கடவுளும் ,காதலியும்

ஒரு சின்னக் கதை , ஒரு ஊருக்கு ஒரு சாமியார் வந்தார்.அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்தது .ஊர்வாசிகளிடம் தண்ணீர் கேட்டார்.எல்லோரும் அவரவர் வேலைகளில் மும்முரமாய் இருந்தார்கள்.யாருக்கும் கேட்கவில்லை.அவருக்கு கோபம் வந்தது , கேட்க்க வில்லை என்ற எரிச்சல் வேறு. அவர்களை பார்த்து சாபம் இட்டார்.பெருமாளே இந்த ஊரில் இனி மழை பெய்யகூடாது ,தண்ணீருக்கு தவிக்கணும்.( பெருமாள் சங்கை எடுத்து ஊதினால் தான் மழை வரும் என்பது ஐதீகம் , அதுவும் இல்லாம லாஜிக் எல்லாம் பார்க்கப்படாது ) பெருமாளும் சரின்னு ஓய்வெடுக்க சென்றார் .
             

ஆனா நம்ம கந்தசாமி மட்டும் வரப்ப வெட்ட ஆரம்பிச்சார்,அடுத்தடுத்த வேலைகளையும் செய்ய ஆரம்பிச்சார். பெருமாள் மேல இருந்து பார்த்து என்னடா இவன் மட்டும் ஏன் வேலை செய்றான், கேட்ருவோம் என வந்தார்.
ஏம்பா கந்தசாமி அதான் மழை எதுவும் வராதே நீ மட்டும் ஏன் இப்படி வேலை செய்ற என கேட்டார்.அதுக்கு கந்தசாமி " பெருமாளே நானும் எதுவும் வராதுன்னுசும்மா இருந்தேன் ,எனக்கு என்னோட வேலை எல்லாம் மறந்து போகும் , உனக்கும் சங்கை எந்த பக்கம் வச்சு ஊதுரதுன்னு மறந்துபோகும், சங்குல குப்பை,தூசி எல்லாம் சேர்ந்துரும் அப்படின்னார்.அட ஆமா அப்படின்னு சங்கை எடுத்து எதுவும் குப்பை அடைச்சிருக்க என ஊதிப் பார்த்தார் , மழை வந்தது.


இதுல என்ன நீதின்ன நாம எத்தனையோ வேலைகளை எதுக்காகவோ  பாதியில் கிடப்பில் போற்றுப்போம்.விடாம வேலை செஞ்சா கண்டிப்பா பலன் உண்டு. சீன முதுமொழி ஒன்று உண்டு
                        
" ஒரு மரத்தை நடுவதற்கு மிக சரியான காலம்
   இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது
   இப்போது மீண்டும் வந்திருக்கிறது "
------------------------------------------------------------------------------------------------------------------
இது சும்மா ஒரு அதுக்கு

கந்தசாமி அவருடைய காதலியோடு சுற்றுலா போனாரு ,போன எடத்தில நல்ல மழை ,ஊருக்கு திரும்ப முடியல ,சரி அங்கேயே இரவு தங்கி காலைல ஊருக்கு போகலாம் அப்படின்னு முடிவு பண்ணி ஒரு ஹோட்டல தங்கினாங்க .அது சிங்கிள் பெட் ரூம் , கந்தசாமிட்ட அவரோட காதலி இத பாருங்க இந்த கர்சீப நடுல வக்கிறேன்,நீங்களும் இந்த பக்கம் வரகூடாது , நானும் வரமாட்டேன் அப்பிடின்னங்க . அவரு சரி என்றார்.

மறுநாள் புறப்பட்டார்கள்,நடந்து வரும் வழியில் ஒரு பள்ளம் இருந்தது,அதை பார்த்த கந்தசாமி ,இங்கே பாரு எவ்வளவு பெரிய பள்ளம் ,இத நான் தாண்டவ என்றார். ஒடனே அவங்க ஆமாமா ஒரு கர்சிப தண்ட முடியல .இத தான்றராம்ம்

அத கேட்ட கந்த சாமி மொகத்துல  பிம்பிளிகி பிலாகி . 
               
--------------------------------------------------------------------------------------------------------------

கமென்ட் போடறதுன்னு முடிவு பண்ணிருந்தா ,இத மனசில வைங்க.

உங்களை கையால மூளையை பயன் படுத்துங்கள்.
மற்றவர்களை கையாள இதயத்தை பயன் படுத்துங்கள்.


மீண்டும் சிந்திப்போம்.



உண்மையுடன் 

அவனி சிவா


படிக்க வேண்டிய பதிவர்கள் - 2

வணக்கம் ,

என் முதல் பதிவிற்கு பின்னூட்டம் இட்டு ஊக்கமளித்து மேலும் எழுத தூண்டிய நண்பர்களுக்கும் என்னை பின் தொடரும் நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி.

முதல் பதிவை கேபிள் சங்கர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்ததை என்னுடைய பதிவு எழுதும் நண்பர்கள் ( யார், யார் என வேறு ஒரு பதிவில் குறிப்பிடுகிறேன் ) ஏன் என்றார்கள் ,

அப்படி பெரிய ரகசியம் எதுவும் கிடையாது .

கதை,கவிதை,கட்டுரை,மேலும் எந்த வடிவில் இலக்கியம் இருந்தாலும் காலத்துக்கு ஏற்ற வாறு பலவற்றை படித்து மகிழ்ச்சி அடைந்து உள்ளேன் .எடுத்துக்காட்டாக சிலரை இந்த நேரத்தில் குறிப்பிட்டு நானும் அவர்களை, அவர்கள் எழுதியவற்றை நினைவு படித்து கொள்கிறேன் .


மேலும் பலரின் பெயர்கள் விடுபட்டு இருக்கும் மன்னிக்கவும்.
படிக்க வேண்டிய பதிவர்கள் போல் படிக்க வேண்டிய நூல்கள் என ஒரு பதிவு போட்டால் இவர்கள் இல்லாமல் பதிவு முற்று பெறாது .


நிற்க,

இப்படி அச்சில் நான் கண்டு இன்னும் சளைக்காமல் படித்து வருகிறேன். பதிவுலகில் நான் முதலில் கண்ட ஒரு எழுத்தாளர் ஆவார். பல வகைகளில் பதிவுலகில் எனக்கு அவர் தான் துரோனாசாரியார். எனவே அவருக்கு சமர்ப்பணம்.

இனி தலைப்பின் உள்ளே


செங்கோவி - இவர் சத்தியமாய் 30 + வயதில் மட்டுமே இருக்க என நம்புகிறேன். அனுபவமானாலும், அரசியலானாலும், தொழில் நுட்பம், திரை விமர்சனம், மொக்கை, இவர் எழுதும் தொடரும் சரி, எழுத்து நடை என சகலமும் சரி வர பெற்று இருக்கிறார் .பதிவுலகில் முதல் 10 இடங்களில் கண்டிப்பாய் இடம் பெறுவார். இவர் பயணம் மேலும் உயர வாழ்த்துகிறேன்.





மன்னிக்கவும் மூன்று பதிவர்களை குறிப்பிடலாம் என எண்ணி இருந்தேன், அப்படி ஒரு எல்லையில் சிக்க விரும்பவில்லை, எண்ணிக்கை முக்கியமாய் இப்போது படவில்லை . தோன்றும் போது எத்தனை பேரை வேண்டுமானாலும் குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.

பதிவு சரி எனில் மகிழ்ச்சி கொள்வேன்
பதிவு தவறு எனில் திருத்தி கொள்வேன்


முதல் பதிவை படிக்க விரும்பினால் இதோ


உண்மையுடன்


அவனி சிவா



7likes
3/3

7 comments:


Minmalar said...
பிரமிக்க வைக்கும் இலக்கிய வரிசைஒவ்வொரு வரை பற்றியும் எவ்வளவு எழுதினாலும் தகும்.
Powder Star - Dr. ஐடியாமணி said...
அருமையான தொகுப்பு! அண்ணன் செங்கோவிக்கு வாழ்த்துக்கள்!
Avani Shiva said...
welcome
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
எவ்வளோ பெரிய லிஸ்ட் ரொம்ப நாளா நோட்டம் விட்ட மாதிரி தெரியுதே
விக்கியுலகம் said...
Nice
கணினி மஞ்சம் said...
முயற்சியை தொடருங்கள்விஜயின் வேலாயுதம் வெற்றியின் அடையாளம்.
MANASAALI said...
சரி சரி

Post a Comment

கருத்து மேடை