குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Tuesday 31 July 2012

புதுமைப் பித்தன் - பதிவுலகில் முதல் விமர்சனம்

வணக்கம்


1958 ல் வெளிவந்த புதுமைப் பித்தன் திரைப்பட விமர்சனம் , வேறு எதையாவது எதிர்ப் பார்த்து ஏமாந்தால் கம்பெனி பொறுப்புக் கிடையாது.


நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கும் அரசரை சிறை வைத்து , இளவரசரை பைத்தியமாய் மாற்றி அரசவை மருத்துவர் , மற்றும் தளபதிகளின் துணையோடு நாட்டை கைப்பற்ற நினைக்கும் அரசரின் தம்பியிடமிருந்து நாட்டையும் , தந்தையையும் காப்பாற்றும் பித்தன் புதுமை பித்தன் .நாட்டையும் காப்பாற்றி காதலியையும் கைப்பற்றுகிறார். கதை என்னவோ அவ்வளவு தான்.


இளவரசராக நடித்து இருக்கும் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிப்பில் கொடி கட்டி பறக்கிறார். கத்திச் சண்டையில் பிரமாதப் படுத்தும் அதே நேரத்தில் பித்தனாக நடிக்கும் போது பின்னி எடுக்கிறார் . ( இப்போதுள்ள நடிகர்கள் அவசியம் படம் பார்க்க வேண்டும்  )


அடுத்து கவனிக்கப் பட வேண்டியவர்கள் இரண்டு பேர். ஒருவர் பி.எஸ்.சரோஜா அடுத்தவர் டி .ஆர்.ராஜ குமாரி . ஹன்சிகா நடித்தால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறார் சரோஜா . அப்படி இருக்கிறார் அதற்கு மேல் நடிக்கிறார் . ஒரு தலையாய் காதலிக்கும் ராஜ குமாரி கண்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆண்களை ஒரு கை பார்க்கிறார்.


சந்திர பாபு சுவைக்காக , கவுண்டமணியை நினைவு படுத்துகிறார்.


தில்லானா பாட்டுப் பாடி என்ற பாடல் கண்டிப்பாய் வெளி வந்த நேரத்தில் வானொலியில் அடிக்கடி ஒலி பரப்ப பட்டிருக்கும். ஒன்பது பாடல்கள் தஞ்சை ராமையா தாஸ் எழுத்துக்களில் நன்று.


மிக முக்கியமாய் உருப்பிட வேண்டிய ஒன்று . படத்திற்கு கதை - வசனம் எழுதி இருப்பவர் மு.கருணாநிதி .


-  பட்டாபிசேகம் நடக்குறதுக்கு முன்னாடியே வாக்கை மீறுவது தான் அரசின்
    முதல் பாடம்.

-  கடலில் மட்டும் அல்ல , நாட்டிலும் பல திமிங்கிலங்கள் உண்டு.

-  மாற்றான் தோட்டத்திற்கு மனம் இருக்கும் சரி , உன் தந்தைக்கு மனம்    
   இருக்குமா ?

பல வசனங்கள் இன்றைய நடைமுறைக்கு ஒத்து வருகிறது.


இயக்கம் ரமான்னா - அவ்வளவு தான் .


பித்தர்களாக இருக்கும் மனிதனை மாற்றும் பித்தன் - புதுமைப் பித்தன்.

Friday 27 July 2012

சிற்றிம்பம் - பெருந்துன்பம் - சார்ந்திருப்பதின் சங்கடங்கள்

வணக்கம் 



வாழ்கையில் நாம் யாரையோ சார்ந்தே வாழ்கிறோம். எல்லா உறவுகளும் நமக்கு நெருக்கத்தையும் , உருக்கத்தையும் , கிறக்கத்தையும் தருபவை . பணம் , புகழ் , வெளிச்சம் இது நமக்கு தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன . சிறு வயதில் விளையாட்டிலும் , வாலிப வயதில் காதலிலும் ,நடுத்தர வயதில் பயத்திலும் , முதுமை காலத்தில் அன்பிலும் வாழ்க்கை ஓடி விடுகின்றன.



இவையல்லாம் இயல்பாய் இருப்பவை தான் . நடுத்தர வயதில் பணமும் , புகழ் சம்பாதிக்க குடும்பத்தினரை மட்டும் ,அதிலும் ஒருவரை மட்டும் சார்ந்து கால மாற்றத்தில் ஒன்றும் இல்லாமலும் போவதும் உண்டு. குடும்பத்தினர் மட்டும் அல்லாது நண்பர்கள் , பணியாற்றும் நண்பர்கள் உண்டு.


இன்று காலையில் ஒருவரை சந்தித்தேன் . அவரின் தோற்றம் என்னை நிலைகுலைய செய்யவில்லை .அடிமனதில் சிறு மகிச்சியை உணர்ந்தேன். அவரிடம் பணம் பெற்று , குடுக்க முடியாமல் அவரிடம் அவமானப் பட்டு மீண்டும் அவரிடமே பணத்திற்காக போய் நின்றுள்ளேன் .


மதுரையில் இன்று லலிதா நகை மாளிகை இருந்த ஒரு பகுதியில் இருந்தது கோல்டன் ஜுவல் பாரடைஸ். நகை வியாபாரம் மட்டும் இன்றி வீட்டு மனை வியாபாரத்திலும் ஈடுபட்டார்.அப்போது எல்லாம் இப்போது இருப்பதை போன்று ஜடாமுனி , தெற்கு ஆவணி வீதிகளில் மட்டுமே நகை கடைகள் இருந்தன . மிகப் பிரமாண்டமாய் இவர் நகைக்கடை திறந்தார். கூடவே பர்னிச்சர் கடையும் , இதுவே இவரும் முதல் வியாபாரம். ஆட்சியில் இருந்தவர்களும் , காவல் துறையும், ஆட்சியரும் , முக்கிய பிரமுகர்களும் அவரின் வியாபார நடைமுறைகளுக்கு மிகவும் உதவியாய் இருந்தனர்.



அவருக்கு மூன்று தம்பிகள் , ஒருவரை தவிர மற்ற இருவரும் அவருடைய நிழலிலும் , அவருடைய வியாபாரத்தையும் பணம் கொடுக்கல் , வாங்கல் தொழிலும் ஈடுபட்டனர்.( எல்லா மட்டத்திலும் அவருக்கு அப்போது செல்வாக்கு இருந்ததால் ) சில காலங்களுக்கு பிறகு அவரின் உண்மை முகம் வெளியே வர , தவறும் வரிசையாக வந்தது. சமயத்தில் சரியானவையும் , தவறாகவே அமைந்தது. விதி அவரை வீதிக்கு அழைத்து வந்தது .


அவருடைய தம்பிகளில் ஒருவர் ஊரை விட்டு ஓடிப் போனார். ஒருவர் பர்னிச்சர் கடையில் வேலைப் பார்த்து வருகிறார்.


அவரை சாராமல் இருந்த இன்னொருவர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஏதோ சார்ந்திருந்தால் தவறே நடக்கும் என்கிற மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டாம் . 


வாழ்க்கை என்பது யாரோ ஒருவரை ஒருவர் சார்ந்து தான் போகும் . அண்ணலும் நம்முடைய தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தால் மகிழ்சியாய் இருக்கும் என்பதை காலையில் பார்த்த மனிதரை பார்த்ததும் புரிந்தது 


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Thursday 26 July 2012

திரும்ப திரும்ப பேசுற நீ - தத்துவம்

வணக்கம்


குடிமகன்கள் பேசுறதை நீங்க பார்த்ருப்பீங்க அல்லது நீங்களே குடிச்சுப் பேசி இருப்பிங்க , பேசினதையே திருப்பி திருப்பி பேசுவாங்க .


ஆனா குடிக்கத குடிமகன்கள் சில வார்த்தைகளை தங்கிலிஷ் , இங்கிலீஷ் கலந்து பேசுவாங்க. அது தெரியாம தான் பேசுறது. அப்படி ஒரு உரையாடலை படிச்சுப் பாருங்க.



ராமு - என்ன ராமு எப்படி இருக்க


சோமு - பைன் நல்லா இருக்கேன்


ராமு -  அப்புறம் வீடு எங்க


சோமு - இப்போ சாலை ரோட்ல வந்துட்டோம்


ராமு - சாலை ரோட்ல எங்க , ஒரு அம்மா பூவும் , புஷமமும் விக்குமே அங்கயா


சோமு - அங்க இல்ல ஷாப் கடை பக்கத்துல


ராமு - அங்க எங்க ஷாப் கடை இருக்கு


சோமு - நடு  செண்டர்ல 


ராமு - லெப்ட்ல இடது பக்கம் திரும்பினா ஒரு கோவில் வருமே அங்கயா


சோமு - ஸ்ட்ரைட்டா நேரா போகணும்


ராமு - நீ எப்படி இருக்கே


சோமு - இருக்கேன் பட் ஆனா 


இப்படியே போய்கிட்டு இருக்கும் , போல்ட்டா இருக்கிற வார்த்தைகளை கவனிச்சு பாருங்க, அப்புறம் இதுல எங்க தத்துவம் இருக்கு அப்படின்னு நினைச்சவங்களுக்கு மட்டும் ஒரு தத்துவம்.



-----------------------------------------------------------------------------------------------




 பொண்ணுங்க அழகா தெரியணும்னா மூணு தடவை மேக் அப் போடணும் 


 பசங்க அழகா தெரிய மூணு பெக் போட்டா போதும் .



மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா



 

Wednesday 25 July 2012

ராணி முகர்ஜி தெரியும் - பிரணாப் முகர்ஜி தெரியுமா

வணக்கம்


ஒரு வழியாக முகர்ஜி குடிமகன் ஆகிவிட்டார். ராணியை தெரிந்த அளவிற்கு பிரணாப்பை குடிமக்களுக்கு தெரியவில்லை - அது போன மாதம் வரை , ஆனால் இப்போது அது இல்லை , இதனை விளக்ககமாக விளக்கவே பதிவு.


பிரணாப் யார் என்று உங்களுக்கு தெரிந்த அளவிற்கு எனக்கு தெரியாது. முன்னாள் அமைச்சர் , முன்னாள் மந்திரி  , முன்னாள் எம் பி , பிறகு அது இந்நாள் ஆனது . முன்பு வகித்த பதவிகளில் எதுவும் , எந்த ஆணியையும்  புடிங்கினது கிடையாது . அம்பானியை வளர்த்து விட்டதை தவிற , இனி பல வியாபாரிகள் வளர்வார்கள் . மக்கள் எப்ப்போதும் போல் ...................................


இது இப்படி இருக்க இவரு சனாதிபதி ஆனதற்கு மதுரையில் தமிழர்களை காத்த வாழும் மகாத்மா ( கள் ) இருக்கும் காங்கிரஸ் கட்சி ( இன்னும் பல பெருமைகளை சொல்லலாம் காங் பற்றி பிறகு அதுவே ஒரு பதிவாகிடும் )
இனிப்பு வழங்கினார்கள் . 

சணங்க  மட்டும் வாக்குப் போட்டு சனாதிபதியை தேர்ந்தெடுத்தால் காங் மீண்டும் மண்ணை கவ்வி இருக்கும். அவரின் ஒரே சாதனை கல்யாணம் ஆனா நாளில் இருந்து இன்று வரை மனைவியுடன் பிணக்கு வந்தது இல்லையாம் . இனிமேலும் வராது அதான் மேப்பில் பார்த்த எல்லா நாடுகளையும் பார்க்க போகலாம் . மனைவியை பார்க்க நேரமும் இருக்காது அப்படியே மனைவி நச்சரித்தால் அவர்களையும் அழைத்துப் போகலாம் .

இலங்கைப் பிரச்னை , அணை  பிரச்னை , எல்லை பிரச்சனை , நக்சல் , விலைவாசி , குடிமக்களின் பிரச்னை எதப் பற்றியும் கவலைபடாமல் அது பாட்டுக்கு இருக்கலாம் . இதற்குத் தான் இவர் இவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் ஆகியே தீருவேன் என்று ஆகிவிட்டார் . 

விளக்கமாய் விளக்கலாம் என்றால் இவருக்கு இந்த விளக்கம் போதும் .


ஒரு நாள் வரும் ராணி முகர்ஜிக்கும் வாய்ப்பு வரும் , வரவேண்டும் என்று பிரார்திர்த்து .................





மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

Monday 23 July 2012

இப்படிதான் ஆரம்பிக்குது மூடநம்பிக்கைகள்


வணக்கம்


செவ்வாய் அன்று ஏதாவது ஒரு விசயத்தை செய்யப் போனால் , இன்னைக்கு வேணாம் செவ்வாய் வெறும் வாய் என வாய்க்கு வந்த மாதிரி சொல்லி நம்ம வாயை மூடப் பார்ப்பாங்க . நாம மூடினா முடிஞ்சது எல்லாம் , அடுத்து எத செஞ்சாலும் எதாவது ஒன்னச் சொல்லி எதுவும் செய்ய விட மாட்டங்க ஆனா அதே நேரத்தில செவ்வாய் வெரும் வாய் கிடையாது., வருவாய் அப்படின்னு சொல்லிப் பாருங்க எல்லாம் நல்லாவே நடக்கும்.எங்க கடவுள் எல்லா நாளையும் , எண்களையும்  , வண்ணங்களையும் , படைச்சது  நல்லதுக்குதான் இந்த மாதிரி நிறைய விஷயம் இருக்கு அதுல போனா பதிவு முடியாது.இந்த மாதிரி நம்பிக்கைகள் இப்படிதான் வந்திருக்கும் .




ஒவ்வொரு மனுஷனுக்கு ஒரு பீலிங் இருக்கிற மாதிரி , எல்லா மேட்டருக்கும் ஒரு கதை இருக்கும்.இந்தக் கதையை  படிங்க


ஒரு ஊர்ல ஒரு சாமியார் ஆசிரமம் இருந்துச்சு. அவருக்கு பல சீடர்கள் இருந்தாங்க , தினமும் பூஜை நடக்கும் . ஒரு நாள் பூஜையின் போது  குறுக்கும் , நெடுக்குமாய் ஒரு பூனை வந்தது .பூஜையின் போது இப்படி நடக்குதே அப்படின்னு பூனையை அருகில் இருக்கும் கம்பத்தில் கட்டி போட சொன்னாரு அதன் படியே செஞ்சாங்க.அந்த நாள் முடிஞ்சு அடுத்த நாள் ,அன்னைக்கும் அதே மாதிரி நடந்துச்சு.இப்படியே தினமும் நடந்துச்சு.அந்த பூனை அந்த ஆசிரமத்தில் இருந்ததால இத நிறுத்த முடியல . காலங்கள் போச்சு சாமியார் இறந்துப் போனார் . சில நாளில் அந்தப் பூனையும் இறந்துப் போனது.

சீடர்கள் அனைவரும் ஒரு மனதாக ஒருவரை சாமியாராக நியமித்து கொண்டார்கள் . புதிதாக வந்த சாமியார் பூஜை நடத்த தயாரானார் . கண்களை மூடியவர்.உடனே திறந்து , சீடர்களே பூஜை நடக்கும் போது ஒரு பூஜை கம்பத்தில் கட்டிப் போட  வேண்டும் என்பது  தெரியாதா என , அவரால் முடிந்த ஒரு நம்பிக்கையை பரப்பினார்.



மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா 

Wednesday 18 July 2012

தவறுதான் - அப்படியே காபிப் பேஸ்ட் செய்வது - ஆனாலும்



வணக்கம்


தவறுதான் - அப்படியே காபிப் பேஸ்ட் செய்வது - ஆனாலும்  சில நல்ல விஷயங்கள் அனைவரிடமும் சேர்வதே சிறந்தது. நன்றி





இந்த ஆவணத்தில்தான் எத்துணை செய்திகள் ?

1)தொலைபேசி எண்கள் 1967ல் சென்னையில்
ஐந்து இலக்கத்தில் இருந்து இருக்கின்றன

2)தலைவரின் அச்சடித்த லெட்டர் பாடு-ல்
முன்னாள் முதல்வர் என்பதோ காங்கிரஸ் கட்சி யின்
அகில இந்திய தலைவர் என்பதோ இல்லை

3)வாழ்த்தை ஏற்று கொண்ட விதம்
எளிமையாகவும் சுருக்கமாகவும் இருக்கிறது

4) வாழ்த்துக்கு நன்றி சொல்லி பதில் எழுதும்
பண்பாடு தெரிகிறது
5) தேர்தலில் தோல்வி உற்ற பிறகு ஆட்சி
கழகம் வசம் வந்த பின்னர் எழுதபெற்ற
மடல் ஆகா இருக்கக் கூடும்

வரலாறு சொல்லும் ஆவணம்
. பேணி காக்க
வாழ்த்துக்கள்

ஆடி வந்த , ஆடி அமாவசை நினைவுகள் - பக்தியையும் தாண்டியது

வணக்கம்

 பதிவு எழுத எத்தனையோ விஷயம் இருந்தாலும் , நாம் எழுதிய சில எழுத்துக்கள் படிக்கும் போது ஒரு பரவசம் ஏற்படும் . இந்தப் பதிவு நான் எழுதிய பதிவையே திருப்பி வேறு ஒரு தலைப்பில் இடுகிறேன் . இதனின் லிங்க் கொடுத்தால் பார்த்து படிக்க உங்களின் இதயம் இடம் கொடுத்தாலும் மனம் கொடுக்காது. எனவே அதனை அப்படியே கொடுக்கிறேன். படித்தப் பாருங்கள் .நிறைவாய் இருந்தால் மகிழ்ச்சி . இல்லாமல் போனாலும் மகிழ்ச்சி.இந்தப் பதிவு எழுதிய காலம் சென்ற வருடம் அக்டோபர் மாதம்.




எங்கள் வீட்டிலிருந்து மீனாக்ஷி கோவிலுக்கு பேசிக் கொண்டே நடந்தால் கூட பத்து நிமிடங்களில் சென்று விடலாம்.அவ்வளவு அருகில் வீடு இருந்தது .பண்டிகை காலத்திலும் , செவ்வாய் ,வெள்ளி போன்ற நாட்களிலும் ,தெருவின் முனையில் பிள்ளையார் இருந்தாலும்,அவரை பார்த்து விட்டு கோவிலுக்கு செல்வது வழக்கமாகி இருந்தது.என்னுடைய பால்ய வயதில்.அப்போது எல்லாம் தெருவில் இருக்கும் பெண்கள் அனைவரும் தினமும் செல்வது ஒரு பழக்கமாகவே கொண்டிருந்தார்கள்.


அப்போது சிறுவர்கள் நாங்களும் அடிக்கடிசென்று வருவோம் .அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசையின் அன்று கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் அதிகாலையில் நீராட போவோம்.எங்கள் வீடு அருகில் இருந்த காரணத்தினால் தொடர்ந்து சில வருடங்கள் சென்று குளித்து வந்தோம் .அந்த நாட்களில் மதுரையின் பல பகுதிகளில் இருந்தும் ,அருகில் இருக்கும் ஊர் மக்கள்,அந்த நாளில் நீராட வேண்டும் என்பதற்காக மதுரை அல்லாத பல ஊர்களில் இருந்தும் வருவார்கள்.

எங்களுக்கு அது ஒரு விஷேச நாட்களை அமைந்தது.தெருவில் இருக்கும் எங்கள் நண்பர்கள்,சுற்றத்தில் இருப்பவர்கள்,சொந்தபந்தங்கள் அனைவரும் கூடிவிடுவோம்,காலை நான்குமணிக்கு எழுந்து விடுவோம் .எங்களை கூட்டி செல்ல பெரியவர்கள் சிலரும் எங்களுடன் வருவார்கள்.பனி எவ்வளவு பெய்தாலும் ,அங்கு சென்று குளித்து வந்தோம்.எங்களுக்கு அது ஒரு சின்ன சுற்றுலா போல இருக்கும்..கோவிலை சுற்றி பிறகு வந்து சாப்பிடுவோம்.அது ஒரு ஏகாந்த காலம்.அப்போது இருந்த குளத்தை பாருங்கள்.




இன்று காலை கோவிலுக்கு சென்றிருந்தேன் .இடையில் பல முறை போயிருந்தாலும் இன்று தான் இரண்டு மணி நேரம் இருந்தேன்,இன்று வெள்ளியாக இருந்தாலும் ,கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.தரிசனம் முடித்து வந்து குளத்தில் அமர்ந்தேன்.பொற்றாமரைகுளத்தை பார்த்தப்போது வருத்தமாக இருந்தது .குளத்தில் தண்ணீர் இல்லை .குளிக்க மட்டும் காலை கூட நனைக்கமுடியது.சுற்றிலும் கம்பி போட்ட வேலிகள். மதுரையை தவிர்த்து தமிழ் நாட்டின் ,இந்தியாவின் ஏன் உலகில் பல பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு அந்த குளம் நினைவுப் புகைப்படம் எடுக்க மட்டும் பயன் படுகிறது .அவர்களை போல் நாமும் எத்தனை இழந்திரிப்போம்.


எதைப் பெற்று இதை இழந்தோம் , இப்போது அந்த குளத்தை பாருங்கள்




பால்ய நினைவுகளை மீட்டு கொடுத்த இந்த குளத்திற்கும் உயிர் இருப்பதாகவே கருதுகிறேன் .



மீண்டும் சிந்திப்போம்.


உண்மையுடன்

அவனி சிவா


Wednesday 11 July 2012

வாழ்க்கை இவ்வளவு வேகமாய் போகிறது

வணக்கம்


நம்ம சாப்பிட்டாலும் சாப்பிடாம போனாலும், தூங்கினாலும்  தூங்காமல் போனாலும், சம்பாதித்தாலும் சம்பாதிக்காமல் போனாலும், காதல், கல்யாணம், கருமாதி, கவுச்சித் தனம், என்ன செய்தாலும், செய்யாமல் போனாலும் காலம் நம்மிடையே நிற்பதில்லை. சில நிகழ்வுகளை பாருங்கள் நாம் செய்ய வேண்டிய காரியம் நிறைய இருப்பதை நமக்கு நினைவுறுத்தும்.

 மும்பையில் இன்னும் ஒரு திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும்  தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே வெளிவந்து பதினாறு வருடங்கள் ஆகின்றன.      (  இப்பதான் வந்த மாதிரி இருந்துச்சு )




இந்தியாவின் மெட்ரோ ரயில் டெல்லியில் ஓட ஆரம்பித்து பத்து  வருடங்கள்
ஆகின்றன.( இன்னும் இந்தியா முழுவதும் வருவதற்கு எத்தனை வருடங்கள் ஆகுமோ )


மதர் தெரசா இறந்து பதினைத்து வருடங்கள்

ஆஸ்கர் விருது வாங்கிய ரஹ்மான் திரை இசைக்கு வந்து இருபது வருடங்கள் . ( இன்னும் சின்ன பையன்  போல இருக்கிறார் )


ஐஸ்வர்யா ராய் , சுஸ்மிதா சென் இவர்கள் உலகப் புகழ் பெற்ற தினம் பதினேழு வருடங்கள்.




தூர்தர்சனில் வெளிவரும் ஜங்கிள்  புக் ஒளி பரப்ப ஆரம்பித்து பதினைந்து வருடங்களுக்கு மேல் .

விண்டோஸ் XP வெளிவந்து பத்து  வருடங்களுக்கு மேல் . ( இன்னும் சரியா பழகாத  மாணவர்களும் , மக்களும் உண்டு ) வெளிவந்தது  2001 ல்.




இப்படி பல நிகழ்வுகள் மேலே குறிப்பட்டது எல்லாம் இப்போது நடந்தது போலவே இருக்கிறது . இப்படி பல நிகழ்வுகள் நடந்துள்ளது . நாம் யாரை ஏமாற்ற நினைத்தாலும் காலம் நம்மை கண்டிப்பாய் தண்டிக்கும் . அப்பாடா பதிவில் மெசேஜ் சொல்லியாச்சு .

மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா


Tuesday 10 July 2012

சுஜாதா , மதன் சொல்லாத கேள்வி - பதில்கள்

வணக்கம்


சுஜாதா என்னை தண்டிப்பார் - மதன் என்னை மன்னிப்பார் 

படிக்கிற காலத்தில் எந்த வித கேள்விக்கும் சரியான பதில் சொன்னதில்லை, எழுதியதும் இல்லை.( இப்ப மட்டும் என்ன வாழுதாம் ) பிறகு பத்திரிக்கை படிக்கும் காலத்தில் கேள்வி பதில் பகுதிகளில் , பல பத்திரிக்கைகள் உற்சாகம் ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனாலும் சுஜாதா , மதன் ஏற்ப்படுத்திய பதிப்புகள் ஏராளம். இந்தப் பதிவிற்கும் அதுவே காரணமாகிப் போனது. இப்போது நான் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்களையும் நானே எழுதி உங்கள் உயிரை வாங்கப் போகிறேன். இது தான் பதிலாக இருக்கும் என நீங்கள் நினைத்தாலும் அல்லது வேறு பதில் உங்களுக்குத தோன்றினாலும் கருத்துக் குத்து குத்தலாம்.

கேள்வி ஒன்று ;

சூப்பரான பையணை விட சூப் ரக பையனை பெண்கள் ஏன் விரும்புகிறார்கள்?

பதில் 

சூப்பராக இருக்கும் பையன் இவர்களைக் காட்டிலும் பணம் செலவழித்து , பவுடர் பூசி , லோசன் தடவி ,ஏமாற்றுவது என்பது இவர்களுக்கு தெரியாத என்ன. ? இந்த உண்மை தெரிவதினால் தான் சூப்பரான பையனை  விட சூப் பையனையே  விரும்புகிறார்கள்.


-----------------------------------------------------------------------------------------------------------


கேள்வி இரண்டு

ஐம்பது கிலோ பெண்ணை ஈசியாயை தூக்கும் பசங்க , இருபது கிலோ சிலிண்டரை தூக்க ஏன் கஷ்டப் படுகிறார்கள் ?


பதில்

பொண்ணு சிலிம்மா இருந்தாலும் , சிலிண்டர் மாதிரி இருந்தாலும் பொன்னை தூக்கும் போது ,சிரிக்கும் போது பத்துக் கிலோ குறையும்.பிறகு சில்மிஷம் செய்யும் போது இன்னொரு பத்துக் கிலோ , அங்க இங்க கை படும் போது இன்னொரு பத்துக் கிலோ , தம் பிடிச்சு தூக்கும் போது  ஒரு முத்தம் குடுப்பாங்க பாருங்க இன்னொரு பத்துக் கிலோ , ஆகா கழிக்காம ,கூட்டி பாருங்க வெறும் பத்து  கிலோ தான் இருப்பாங்க.

-------------------------------------------------------------------------------------------------------------


கேள்வி மூன்று 


உப்புமா படம் சமயத்தில் கிளிக் ஆயிடுது , அதே சமயத்தில் உலகத் தரம் என்று சொல்லப் படுகின்ற படம் பிளாப் ஆயுடுது ஏன் ?


பதில் 

உப்புமா படம் எடுப்பவர்கள் கதை , வசனம் ஏதோ  அவர்களுக்கு தெரிந்த அளவிற்கு செய்து வெற்றியும் பெற்று விடுகிறார்கள். உலகத் தரத்தில் படம் எடுக்கும் புத்திசாலிகள் , உலகத்தின் எல்லா  மூலைகளிலும் இருந்து சுட்டு எடுப்பதை நம்ம பிளாக்கர் போன்றவர்கள் சான்றுடன் எடுத்து காட்டுவதால் படம் பிம்பிளிக்கி பிளாக்கி.


---------------------------------------------------------------------------------------------------------------

 மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா 


Wednesday 4 July 2012

பில்லா பார்க்காத துப்பாக்கியா

வணக்கம்


எங்க ஊரில் பல விஷயங்கள் ( விடயங்கள் ) உண்டு . எங்கள் என்பதை என் ஊர் எனக் கொண்டால் மதுரை .

முதன் முதலில் மனிதன் கூரை வீட்டிலிருந்து காரை வீட்டில குடி போனாலும் காரை வீட்டிலிருந்து எல்லா பக்கமும் சுவர் எழுப்பிய வீடு கட்டியப் போது பிறந்தது தான் நம்மை பஞ்சர் ஆக்கும் பஞ்ச டயலாக் .

சுவரை கண்டுப் பிடித்தப் போதே பஞ்ச டயலாக்கையும் சேர்த்தே கண்டுபிடித்திருப்பார்கள் போலும் .சுவரின் மீது கரிக்கட்டையின் உதவியோடு  ஏசு வருகிறார் என ஒரு அழைப்பு என்றால் வரட்டும் பார்க்கலாம் என நையாண்டி அதன் பக்கத்தில்..


இங்கு யாரும் சுவரில் நோட்டீஸ் ஓட்டக்கூடாது என்றால் சரி என பதில் , அதே சுவற்றில்

சுவர் , அதன் மேல் கரித்துண்டு  அதனால் எழுதிய சில பஞ்ச டயாலாக்  ( பஞ்ச தான் ) அதக்குப்பிறகு சுவரொட்டி அதில் தான் ஆரம்பித்தது பஞ்ச டயலாக்கிலிருந்து பஞ்ச டயலாக் . ஆரம்பித்து  என்னவோ சினிமா ரசிகர்தான் .ஆனால் வழி மொழி நடத்தாமல் இருந்தாலும் நிறைவேற்றியது  அரசியல் தொழில் புரிபவர்கள் மட்டுமே..


இன்று சிறைக் கட்டிலும் சுவரை நிறபபியதே சாதனை..


அ  தி மு க நிலைமை இதை விட பரிதாபம் , அவர்கள் ஆயிரம் நோட்டீஸ் எனக் கொண்டால் இவர்கள் இரண்டாயிரம் நோட்டீஸ் அடித்து எதனோயோ மறைக்க ஆசைப்படுகிறார்கள்..


முடிவாக கலை ,இலக்கியம்,,சினிமா , திரைப்படம் , அரசியல் ,பொதுவாழ்க்கை , எதுவாயுனும் மதுரை சிறப்பாகவே இருக்கின்றது .அது தொடரும் .....



பதிவின் தலைப்பு அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்ப்படிதினால்  அது உங்க நிலைமை .இதே ஊரில் இன்னும் இவரை விட சிறப்பான பஞ்ச டயலாக் உண்டு..

Tuesday 3 July 2012

JULY 4 - DMK SPECIAL ( AIYO KOLRAANGALE )


FLASH NEWS - SUN TV , KALAINGER TV








DMK ALPHABET


A - ANTICIPATORY BAIL

B-  BRIBE

C - COLLECTION

D - DONATION

E - ELECTION

F - FOREIGN TRIP

G - GHOTALA

H - HAWALA

I  - IDIOT

J -  JAIL

K - KURSI

L -

M - MINING

 N -

O - ORDER

P  - POLICE

Q - QUOTED-OUT OF CONTEXT

R -

S -SCAM

T - TAX

U - UNDERSTANDING ( WITH CONG )

V

W

X

Y

Z - ZZZZZZZ

pl fill in the blank letter for DMK alphabet


Sunday 1 July 2012

திருந்தினா சரி - இந்த மாதமும் நீங்கள் ஏமாற தயாரா

வணக்கம்


பொழுது போய் பொழுது விடிஞ்சா நம்மளை ஏமாத்த பொட்டிகடை ஆரம்பிச்சு நகைக்கடை வரைக்கும் ரெடியா இருப்பாங்க. காபித்தூள் ஆரம்பிச்சு காண்டம் வரைக்கும் விற்பனை செய்ய அவங்க செய்யற அலம்பின் அடுத்த டூல் தான் இந்த ஜூலை 2012 .

அட்சய திருதியை அன்னைக்கு நகை வாங்கினா நகைகடைக்காரன் கல்லா புல்லா ஆகும் . நம்ம மக்களும் மூணு பத்து ரூபாய் மாதிரி கூட்டம் கூட்டமா போயி வாங்குதுங்க.செவ்வாய் கிழமை எதுவும் நல்ல காரியம் கூடாதும்பாங்க.கேட்டா செவ்வாய் வெறும் வாயம் , என் அது வருவாயா இருக்காதா என்ன .

பச்சை கலர் சட்டை எடுத்துக் கொடுத்தா அண்ணன் , தம்பி நல்ல இருப்பாங்க ,

இப்படி பல மேட்டர் மீட்டர் மீட்டரா ஓடிக்கிட்டுருக்கு.அடுத்து இப்போ ஒன்னு ஆரம்பிச்சிருக்காங்க . இன்னும் புல் பிளட்ஜா இன்னும் இறங்கல .823  வருசத்திற்கு அப்புறம் இந்த மாசம் தான் ஐந்து ஞாயுறு , திங்கள் , செவ்வாய் வருதாம் , அதனால் இந்த மாதம் ரொம்ப ராசியனதாம் .இத நம்பி பொண்ணு சொல்லிச்சு பொண்டாட்டி சொல்லிச்சுன்னு எதையாவது வாங்கி கடன்காரன் ஆயிரதிங்க .


பார்த்து செக் பண்ணிக்கலாம்










மாசம் மொத நாளில் எப்பிடி ஒரு பதிவு. இந்த மாசம் முழுசா இப்படிதான் இருக்குமோ.திருந்தறது ரொம்ப கஷ்டம் . இந்த நல்ல விசயத்தை பொது நலன் கருதி யார் வேண்டுமானாலும் காபி பேஸ்ட் செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம்

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா