குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Wednesday 29 February 2012

மூணு புரோட்டா ஒரு ஆம்லேட்

வணக்கம்


இன்று பன்முக முகம் கொண்ட என் அபிமான ( எனக்கு மட்டும் அல்ல ) எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நான்காம் ஆண்டு நினவு தினம் . காலங்கள் எவ்வளவு வேகமாக நகர்கின்றன.இவர் இப்போது இருந்திருந்தால் கூடங்குளம் பிரச்சனைக்கு ஒரு தீர்க்கமான முடிவுகளை தந்திருப்பார்.தெரிஞ்ச சினிமா தெரியாத விசயம் என்கிற நூலிலுருந்து .






தமிழ் சினிமாவை மற்றுமொரு தளத்துக்கு அழைத்து சென்றவர். இவரின் "கரை எல்லாம் செண்பக பூ" தொடங்கி, கணேஷ் -வசந்த்தை கடந்து, ஜீனோவை அதிசயித்து நின்ற தலைமுறைதான் இன்றைய தலைமுறை.

கணையாழியின் கடைசி பக்கங்கள் இப்போதும் இவரது புகழை இலக்கியவாதியாகவும் நிலை நாட்டி கொண்டிருக்கிறது.

"கனவுத் தொழிற்சாலை" தொடருக்கு ஆனந்த விகடனில் அண்ணாசாலையில் பேனர் வைத்தது வரலாறு. "கற்றதும் பெற்றதும்" மூலமாக இன்றைய இளம் எழுத்தாளர்கள் அவரிடம் கற்றதும் பெற்றதும் ஏராளம்.

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவரின்றி தமிழின் நவீன எழுத்து தலைமுறை இல்லை என்பது நிதர்சனம்.

சுஜாதா என்று பரவலாகவும், வாஞ்சையாகவும் அறியப்பட்ட ரங்கராஜனின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று. 










--------------------------------------------------------------------------------------------------------------



மேலும் ஒரு சங்கடம் தரும் ஒரு செய்தி . எழுத்தாளர் பாலகுமாரன் மூச்சுதினரலால் அப்போல மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.அவர் நலம் பெற்று மீண்டும் வீடு திரும்ப பிரார்த்திப்போம் .





--------------------------------------------------------------------------------------------------------------


 நேரம் இல்லை , நேரம் இல்லை என புலம்பி தீர்க்கும் நமக்கு இந்த ஆண்டு ஒரு நாள் அதிகமாக கிடைத்துள்ளது.பயன் உள்ளதாக செய்வோம் . ( எனக்கும் தான் )



 -------------------------------------------------------------------------------------------------------------


சங்கரன் கோவில் வெற்றி யாருக்கு என தெரியாத நிலையில் ஆளாளுக்கு கண்டிப்பாய் நாங்க தான் வெற்றிப் பெறுவோம் என அறிவித்துள்ளனர்.எப்போதும் போல் எல்லா உதிரி கட்சிகளும் ( காங்கிரசும் தான் ) தி மு க விற்கு ஆதரவு தெரிவித்து விட்டன.மருத்துவருக்கு இப்போது தான் தெரிந்து ( எவ்வளவு வருஷம் ) எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லையாம்.காம்ரேட் நிலைமை படு பாவம்.கேப்டனுக்கு ஆதரவாம்.செங்கொடித் தோழர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

-------------------------------------------------------------------------------------------------------------


மீண்டும் நாளக்கி புரோட்டாவும் ஆம்லேட் சாப்பிட ரெடியா இருங்க .


 மீண்டும் சிந்திப்போம்.
உண்மையுடன்
அவனி சிவா

 

Monday 20 February 2012

தமிழ் இரண்டாயிரம் வருடம் அல்ல , இருபதனாயிரம் வருடம் பலமானவன்.

வணக்கம்


கதை, இதனை எழுத எத்தனித்து , என்னுடைய  முகநூல் பார்க்க சென்றேன்.அதில் என் முகநூல் நண்பர் அனுஅசோக் அவர்கள் ஒரு செய்தியை பகின்று அதனை எல்லா தமிழர்களும் படிக்க வேண்டும் என அவரின் விருப்பம்.  அவரின் கட்டுரையை அப்படியே தருகிறேன்.இதை காபிப் பேஸ்ட் எனக் கொண்டாலும் இதனை புரிந்துக் கொண்டால் சரி .








 இதோ அந்தக் கட்டுரை 


நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலி...ல் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட "குமரிப் பெருங்கண்டம்". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் "குமரிக்கண்டம்". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள "தென் மதுரையில்" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், "பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் "கபாடபுரம்" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் "தொல்காப்பியம்" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், "அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம்! இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே.



நன்றி 

மீண்டும் சிந்திப்போம்

அவனி சிவா
 

Saturday 18 February 2012

அம்ம்மான்ன சும்மா இல்லடா

வணக்கம்


மு.க.அவர்களுக்கு சமர்ப்பணம் செய்த கதை நல்ல ரீச் ஆயிருக்கு.அடுத்தக் கதை யாருக்கு சமர்ப்பணம் செய்யலாம்ன எத்தனைப் பேருக்கு கதையை தேடுறது.அவ்வ்வளவுப் பேர் வர்றாங்க நம்ம லிஸ்ட்ல.தமிழ்நாட்டின் மக்கள் தர்மப் படி அடுத்து அம்மாவுக்குத் தான் . நாம தான் இவரு இல்லன்ன இவங்களை தானே தூக்கி வைப்போம் அப்புறம் அவங்க நமக்கு ஆப்பு வப்பாங்க .


சொத்து சேர்கிறதில இவங்களும் ஒன்னும் அவருக்கு குறைஞ்சவர் கிடையாது.அவராவது குடும்பத்துக்கு சேர்த்தாரு. இவங்க யாருக்கு தான் சேர்த்து வைக்கிரன்களோ.


 அம்மாவுக்கு ஒரு கதை மட்டும் போதாது.ரெண்டுகதை இருக்கு .அய்யோ அய்யோ கரண்டுப் போயிருச்சே.அம்மா இதையுமா கவனிப்பாங்க.எப்புடி அவருக்கு கதை போடும் போது போகாத கரண்டு இப்ப மட்டும் எப்புடி.அவங்களுக்கே இருட்டு ( வெளிச்சம் ) தான் போடணும் . இங்க எங்க வெளிச்சம் வாழுது.இன்னும் பத்து நிமிஷம் தான் ups தாங்கும் அப்படின்னு இன்டர்நெட் சென்டரில் சொன்னதால கதை நாளைக்கு ,ஆனா அவங்களை பத்தி ஒரு விவரம் . லக்ஸ் சோப்பு இருக்குல்ல அதுக்கு அந்தகாலத்தில் அம்மா விளம்பரத்தில நடிச்சங்கலாம் . லக்ஸ் விளம்பரத்தில் நீண்ட நாள் தோன்றிய நடிகை இவங்க தானாம் . அப்பிடியே இருந்திருக்கலாம்.


 அந்த விளம்பரம்




இன்னைக்குள்ள இன்னும் ஒரு ஆறு அமைச்சர்களை தூக்கப் போறாங்கலாம்.

நம்மால முடிஞ்ச யோசனை 

 


மீதி கதை நாளைக்கு


மீண்டும் சிந்திக்கலாம்
உண்மையுடன்
அவனி சிவா

Thursday 16 February 2012

திருக்குவளை முத்துவேலர் கருணாநிதிக்கு

வணக்கம்




ஒரு முன் குறிப்பு : இவரு மட்டும் தான் இப்படி , மத்தவங்க எல்லாம் ரொம்ப ஒழுங்கான்னு கேட்ராதிங்க , அவங்களுக்கும் வெவ்வேறு கதை இருக்கு .என்ன இருந்தாலும் இவரு தானே எல்லாருக்கும் மூத்தவர் .




இது புனையப் பட்ட கதை அல்ல.சுபி இலக்கியத்தில் வரும் கதை தான் .




முல்லா நஸ்ருதின் ஒரு நாள் ரொம்ப சோகமா உட்கார்ந்திருந்தார்.அந்த வழியா வந்த அவருடைய நண்பர் , ஏம்பா இப்படி சோகமா இருக்க ,அப்படின்னு கேட்கவும் , இல்ல எங்க மாமா இறந்துப் போயிட்டாரு . அவரு அவரோட எல்லா சொத்தையும் எனக்கு எழுதி வச்சிட்டு போயுட்டார் அப்படின்னார். அடடா உங்க மாமாவைத் தான் எனக்கு நல்ல தெருயுமே . அதன் எல்லா சொத்தையும் எழுதி வச்சிருக்கார் அப்புறம் ஏன் சோகமா இருக்கே.




இப்படித் தான் போன மாசம் என்னோட சித்தப்பா இறந்துப் போனார் .அவரும் அவரோட எல்லா சொத்தையும் எழுதி வச்சிட்டுப் போயிட்டார்.ஆஹா ஆமா சரி அவரும் தான் எல்லாத்தையும் எழுதி வச்சிருக்கார் , அப்புறமும் என்ன சோகம்.






இல்ல போன வாரம் எங்கத் தாத்தா வேற செத்துப் போயி அவரோட எல்லா சொத்தையும் எழுதி வச்சிட்டார் . நண்பருக்கு கோபம் கொஞ்சமா வந்து, ஓவரா போச்சு.இப்போ உனக்கு என்னத்த பிரச்சினை அப்படின்னு கேட்டா.




இல்ல என்னோட சொந்தக்காரங்க எல்லாம் செத்துப் போயுட்டாங்க , இனிமே எனக்கு யாரு சொத்தை எல்லாம் எழுதி வப்பங்கன்னு அழுதாராம்




இப்படிக்கா , நம்ம தலைவரின் கொல்ல்ல்லுப் பேரன் கேட்டாருன்ன நம்ம என்ன ஆவோம்,





அடுத்து நம்ம அம்மாவுக்கு , அதுவரைக்கும் தி மு க அனுதாபிகள் ( லக்கி லுக் ஆன்லைன் ) திட்டாதிங்க .






மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனி சிவா 

முடியாதுன்னு சொன்ன - கண்டிப்பா ஜெயிக்கலாம்


வணக்கம்

நேற்று போட்ட பதிவிற்கு ( கணக்குப் புதிர் ) நல்ல வரவேற்ப்பு.எனவே அடுத்த கணக்குப் புதிரில் விடையை கொடுக்காமல் அடுத்த பதிவில் போடலாம் என எண்ணம்.

நம்மளை யாராவது உன்னால முடியாதுன்னு சீண்டிகிட்டே இருப்பாங்க.அவங்களுக்கு இதே வேலயாவும் இருக்கும்.


ஐன்ஸ்டீன் - அவரது ஆசிரியரால் ' மண்டு' சாமர்த்தியம் போதாது என்று ரிப்போர்ட் கார்டுடன் வெளியேற்றப் பட்டவர்.அப்போது கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து இருந்தால் உலகம் ஒரு மாபெரும் அறிவியலாரை இழந்திருக்கும்.


நோர்மா ஜீன் பேக்கர் - இந்தப் பெண்மணி மாடலாக ஆசைப்பட்டு ஒரு மாடலிங் கம்பெனிக்குப் போய் வாய்ப்பு கேட்டார்.' நீ பேசாமல் எதாவது கிளார்க் வேலைக்குப் போ .அல்லது கல்யாணம் செய்துக்கொள் ' இத இரண்டுக்கும் தான் நீ லாயக்கு என்று அவமானப் படுத்தி அனுப்பி விட்டார்கள்.நோர்மா தனது மாடலின் கனவை அத்தோடு விட்டிருந்தால் ' மர்லின் மன்றோ ' என்ற அற்புத நாயகி கிடைத்திருக்க மாட்டார்.
மைக்கேல் ஜோர்டான்  - உலகப் புகழ் பெற்ற கூடை பந்தாட வீரரை ,அவர் பள்ளிக் கூட கூடை பந்தாட டீமில் விளையாட தகுதி இல்லாதவர் என்று ஒதுக்க பட்டவர் . அப்போது அவர் சோர்ந்திருந்தால் உலகப் புகழ் அடைந்திருக்க மாட்டார் .

இவ்வளவு என் இந்தப் பதிவை போடுவதற்குள் நான்கு முறை மின்சாரம் போயிட்டது.சரி ஆணியே புடுங்க வேண்டாம்னு எந்திரிச்சா திரும்பி கோவிச்சிட்டு போன சம்சாரம் மாதிரி திரும்பி வந்திருச்சு.பாருங்க நான் இந்தப் பதிவை போடனம்னு இருக்கு.நீங்க படிக்கணும்னு இருக்கு.

மீண்டும் சிந்திப்போம்
உண்மையுடன்
அவனி சிவா

Wednesday 15 February 2012

கணக்கு விளையாட்டு - கணக்குப் புலி எல்லாம் வாங்க


 வணக்கம்


எல்லாரும் காதலர் தினம் கொண்டடி சந்தோசமா இருந்திருப்பிங்க .பிகர கணக்குப் பண்ணினவங்க ,கொஞ்சம் கணக்கையும் பண்ணிப் பாருங்க.எல்லாம் சின்னப் பசங்க கணக்குதான் .விளையாடிப் பாருங்க.விடைகள் கீழே இருக்கும் .செக் பண்ணிப் பார்த்துட்டு சரியா இருந்தா நீங்க தான் கணக்குப் புலி .

 -------------------------------------------------------------------------------------------------------------



 111
 333
 555
 777
 999

இந்த எங்களை கூட்டினா 2775 வரும் ,இதுல ஒன்பது எங்களை நீக்கி விட்டு அதற்க்கு பதிலாக 0 ஒன்பது முறை பயன் படுத்தி 1111 என்கிற விடை வரனும் .

 -------------------------------------------------------------------------------------------------------------

 ஒரு கம்பம் ,உயரம் 13 அடி ,குட்டிப் பல்லி அதன் மீது ஏறி விளையாடுகிறது.நிமிடத்திற்கு 3 அடி ஏறும்,2 அடி சறுக்கும் ,அப்படியானால் அது உச்சிக்குப் போக எத்தனை நிமிடங்கள் ஆகும் .

-------------------------------------------------------------------------------------------------------------

நான் ஒரு கல்யாணத்தில் மூன்று பாட்டு கேட்டேன்.2 பாடலை பாலா பாடினாரு,2 பாடலை மனோ பாடினாரு,எப்படி

--------------------------------------------------------------------------------------------------------------


 மூன்று எங்கள் அவற்றை ஒன்றின் கீழ் ஒன்றாய் எழுதி கூட்டினாலும் , பெருக்கினாலும் ஒரே விடை வரும் ,அந்த எங்கள் எது .


-------------------------------------------------------------------------------------------------------------


 357
 816
 492

இந்த எங்களை இடது , வலது , கீழ் ,மேல் கூடினால் ஒரே விடை 15 வரும் ,இந்த எண்களை மாற்றிப் போட்டு குறுக்கே கூட்டினாலும் அதே விடை வர வேண்டும் .

------------------------------------------------------------------------------------------------------------


10 க்கு கீழ் ஒரு எண் . அதை எட்டு முறை பயன்படுத்தி வெறும் கூட்டல் மூலம் 250 விடை வர வேண்டும்.


------------------------------------------------------------------------------------------------------------

கரும்பு ஒரு வெட்டு வெட்டினா இரண்டு துண்டு .இரண்டு வெட்டு வெட்டினா எத்தனை துண்டு .


------------------------------------------------------------------------------------------------------------

10 ன் இரண்டாம் அடுக்கு எண் 100 , அதன் நான்காம் அடுக்கு எண் என்ன.


---------------------------------------------------------------------------------------------------------------




எல்லா கேள்விக்கும் விடை தெருயுதா.ஒரு தடவ சரி பாருங்க.விடை தெரியலையா கொஞ்சம் இந்த இடை பாருங்க .எதாவது ஒன்னு உங்களுக்கு தெருஞ்சிரும் .



 


இப்போ இடை,ச்சே விடை 


100       110 
000       002
005       000
007       000
999      999
  
--------------------------------------------------


11 நிமிடம்


-------------------------------------------------


பாலா பாடினது ஒன்னு , மனோ பாடினது ஒன்னு ,சேர்ந்து பாடினது ஒன்னு


------------------------------------------------------------------------------------------------------------


1,2,3


------------------------------------------------------------------------------------------------------------


816
357
492


----------------------------------------------------------------------------------------------------




222+22+2+2+2 = 250 


------------------------------------------------------------------------------------------------------


மூன்று துண்டுகள் 

-----------------------------------------------------------------------------------------------

10 , 000 
 


--------------------------------------------------------------------------------------------------------
 
 மீண்டும் சிந்திப்போம்  


 உண்மையுடன்

 
 அவனி சிவா


 

 
 

Tuesday 14 February 2012

பொதுவாத்தான் சொல்றேன் - காதலர்களுக்கு

வணக்கம் 

இன்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.சில இடங்களில் இதற்க்கு எதிர்ப்பும் உண்டு .அதுவும் சரி தானே ,சட்டீஸ்கரில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கு மட்டும் இன்று பெற்றோகள் தினமாக கடைபிடிக்கும் என்று அந்த அரசு தெரிவித்துள்ளது.


நாமாலும் காதலர் தினத்திற்கு எதாவது பதிவு போடணும் இல்லையா ( நீ பதிவு போடாமல் இருந்தாலே நல்லது அப்படின்னு சொல்றவங்க எல்லாம் ,அப்பிடியே சொல்லிட்டு போங்க ) என்ன பதிவு போடலாம்னு யோசிச்சேன் .நம்ம பெரியவங்க நம்ம வாழ்க்கைக்காக சொல்லிட்டு போனத திரும்ப ரீவைண்ட் பண்ணி பார்ப்போம்.கீழே வர்றது எல்லாம் வாழ்க்கைகாக சொன்னது . அதையே அங்கங்க மானே ,தேனே அப்படின்னு போடாம காதல போட்டு பாருங்க ,சரியாய் வரும் அதுவும் சரியாய் 14 விசயங்கள் தான் .

கடினமான கடந்து வரத் தேவை , நம் வாழ்வுக்கென்று ஒரு நோக்கம்,நாம் அடைய ஒரு லட்சியம் , நாம் நேசிக்க ஒரு மனிதர் .

வருத்தம் உங்கள் சக்தியை உறிஞ்சிகிறது.நம்பிக்கை உங்கள் சக்தியை பல மடங்கு பெருக்குகிறது.


உங்கள் நம்பிக்கையின் ஆழத்தை பொறுத்தே , உங்கள் வாழ்வின் உயரம் அமைகிறது.


செய்ய வேண்டிய ஒன்றை யோசித்துக் கொண்டே இருந்தால்,அதை செய்ய முடியாமல் போகிறது.


முக்கியமான ஒன்றுக்காக,முக்கியமில்லாத விஷத்தை ( விஷயத்தை ) நீக்குவதே தியாகம்.


சுறுசுறுப்பு மட்டும் போதாது.எறும்புகள் கூட சுறுசுறுப்பாக உள்ளது .அது எதற்கு பயன் படுகிறது என்பதே விஷயம்.


நம் மகிழ்ச்சியை இழந்து மற்றவர்களுக்கு மகிழ்ச்சி தருவது தான் சமரசம் என்று பெயர் .


பல பேருக்கு தங்களை மாற்றி கொள்வதை விட ,புலம்பவது எளிதாக இருக்கிறது.


கடவுள் நமக்கு பரிசளிக்க விரும்பினால் ,அந்த பரிசை ஒரு பிரச்னையில் தான் பொட்டலம் கட்டி அனுப்புகிறார்.


ஊக்கமும் லட்சியமும் உள்ளவரை தோல்வி என்பது தள்ளி போகும் வெற்றி தான்.


குற்றம் கண்டு பிடிக்க வேணாம்.தீர்வுகளை கண்டு பிடியுங்கள்.


எந்த நேரத்தில் எது செய்வதன்று தெரிந்தால்,எல்லா நேரமும் நல்ல நேரம் தான்.


ஒருவரை நேசிப்பதைக் காட்டிலும் அவருக்கு செய்ய கூடிய மரியாதை , அவரை நம்புவது.


உங்கள் எதிர் காலத்தை கணிக்க சிறந்த வழி , உங்கள் எதிர் காலத்தை நீங்களே நிர்ணயித்துக் கொள்வது தான்.


மீண்டும் சிதிப்போம் 
அவனி சிவா 

Saturday 11 February 2012

இது தான் இந்தியா

வலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் 


எதயோ எழுதலாம் என்று எண்ணி இருந்தாலும் எழுத முடியவில்லை .மன்னிக்கவும் .மீண்ண்டும் படம் வாயிலாக மட்டும் 






















மீண்டும் சிந்திப்ப்பேன்


அவனி சிவா

Wednesday 1 February 2012

வருமானம் வந்தாலும் வரி கட்டியே வருமானம் போயிரும்

வணக்கம் 


நீங்க இந்தியாவில் பிறந்தவர் ஆயின் . எந்த வேலையை செஞ்சாவது சம்பாதிக்கலாம்.ஆனால் வரி மட்டும் சரியா கட்டினா வந்த வருமானம் எல்லாம் போயிரும்.இது சிதம்பரம்,ராசா,தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.வேறு பல கழகங்களிலும் ,கட்சியிலும் சேவை செய்பவர்களுக்கு இது பொருந்தாது.அவங்க தான் வரியே கட்றதில்லையே ,இதை தமிழில் சொல்வதை விட ஆங்கிலத்தில் சொல்வது எளிது.இதான் கொலை வெறி காலம் ஆச்சே.


1) Qus. : What are you doing?
Ans. : Business.
Tax : PAY PROFESSIONAL TAX!


2) Qus. : What are you doing in Business?

Ans. : Selling the Goods.
Tax : PAY SALES TAX!!


3) Qus. : From where are you getting Goods?

Ans. : From other State/Abroad
Tax : PAY CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI!


4) Qus. : What are you getting in Selling Goods?

Ans. : Profit.
Tax : PAY INCOME TAX!


5) Qus. : How do you distribute profit ?

Ans : By way of dividend
Tax : Pay dividend distribution Tax


6) Qus. : Where you Manufacturing the Goods?

Ans. : Factory.
Tax : PAY EXCISE DUTY!


7) Qus. : Do you have Office / Warehouse/ Factory?

Ans. : Yes
Tax : PAY MUNICIPAL & FIRE TAX!


8) Qus. : Do you have Staff?

Ans. : Yes
Tax : PAY STAFF PROFESSIONAL TAX!


9) Qus. : Doing business in Millions?

Ans. : Yes
Tax : PAY TURNOVER TAX!

Ans : No
Tax : Then pay Minimum Alternate Tax


10) Qus. : Are you taking out over 25,000 Cash from Bank?

Ans. : Yes, for Salary.
Tax : PAY CASH HANDLING TAX!


11) Qus.: Where are you taking your client for Lunch & Dinner?

Ans. : Hotel
Tax : PAY FOOD & ENTERTAINMENT TAX!


12) Qus.: Are you going Out of Station for Business?

Ans. : Yes
Tax : PAY FRINGE BENEFIT TAX!


13) Qus.: Have you taken or given any Service/s?

Ans. : Yes
Tax : PAY SERVICE TAX
!

14) Qus.: How come you got such a Big Amount?

Ans. : Gift on birthday.
Tax : PAY GIFT TAX!


15) Qus.: Do you have any Wealth?

Ans. : Yes
Tax : PAY WEALTH TAX!


16) Qus.: To reduce Tension, for entertainment, where are you going?

Ans. : Cinema or Resort.
Tax : PAY ENTERTAINMENT TAX!


17) Qus.: Have you purchased House?

Ans. : Yes
Tax : PAY STAMP DUTY & REGISTRATION FEE !


18) Qus.: How you Travel?

Ans. : Bus
Tax : PAY SURCHARGE!


19) Qus.: Any Additional Tax?

Ans. : Yes
Tax : PAY EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX !!!


20) Qus.: Delayed any time Paying Any Tax?

Ans. : Yes
Tax : PAY INTEREST & PENALTY!
21) Qus.: Do you own a Vehicle?
Ans.: Yes
Tax: Pay Road Tax!
22) Qus.: Do you drive a Vehicle?
Ans.: Yes
Tax: Pay Toll Tax!

23) INDIAN :: Can I Die Now??

Ans :: WAIT WE ARE ABOUT TO LAUNCH THE FUNERAL TAX!!!














இனிமே இப்படி எதாவது சொன்னத் தான் சம்பாதிப்பது எப்படின்னு யோசிக்கணும், 



நமக்குத் தான் வருமானமே இல்லடே