வணக்கம்
1958 ல் வெளிவந்த புதுமைப் பித்தன் திரைப்பட விமர்சனம் , வேறு எதையாவது எதிர்ப் பார்த்து ஏமாந்தால் கம்பெனி பொறுப்புக் கிடையாது.
நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கும் அரசரை சிறை வைத்து , இளவரசரை பைத்தியமாய் மாற்றி அரசவை மருத்துவர் , மற்றும் தளபதிகளின் துணையோடு நாட்டை கைப்பற்ற நினைக்கும் அரசரின் தம்பியிடமிருந்து நாட்டையும் , தந்தையையும் காப்பாற்றும் பித்தன் புதுமை பித்தன் .நாட்டையும் காப்பாற்றி காதலியையும் கைப்பற்றுகிறார். கதை என்னவோ அவ்வளவு தான்.
இளவரசராக நடித்து இருக்கும் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிப்பில் கொடி கட்டி பறக்கிறார். கத்திச் சண்டையில் பிரமாதப் படுத்தும் அதே நேரத்தில் பித்தனாக நடிக்கும் போது பின்னி எடுக்கிறார் . ( இப்போதுள்ள நடிகர்கள் அவசியம் படம் பார்க்க வேண்டும் )
அடுத்து கவனிக்கப் பட வேண்டியவர்கள் இரண்டு பேர். ஒருவர் பி.எஸ்.சரோஜா அடுத்தவர் டி .ஆர்.ராஜ குமாரி . ஹன்சிகா நடித்தால் எப்படி இருக்கும் ? அப்படி இருக்கிறார் சரோஜா . அப்படி இருக்கிறார் அதற்கு மேல் நடிக்கிறார் . ஒரு தலையாய் காதலிக்கும் ராஜ குமாரி கண்களை மட்டும் வைத்துக் கொண்டு ஆண்களை ஒரு கை பார்க்கிறார்.
சந்திர பாபு சுவைக்காக , கவுண்டமணியை நினைவு படுத்துகிறார்.
தில்லானா பாட்டுப் பாடி என்ற பாடல் கண்டிப்பாய் வெளி வந்த நேரத்தில் வானொலியில் அடிக்கடி ஒலி பரப்ப பட்டிருக்கும். ஒன்பது பாடல்கள் தஞ்சை ராமையா தாஸ் எழுத்துக்களில் நன்று.
மிக முக்கியமாய் உருப்பிட வேண்டிய ஒன்று . படத்திற்கு கதை - வசனம் எழுதி இருப்பவர் மு.கருணாநிதி .
- பட்டாபிசேகம் நடக்குறதுக்கு முன்னாடியே வாக்கை மீறுவது தான் அரசின்
முதல் பாடம்.
- கடலில் மட்டும் அல்ல , நாட்டிலும் பல திமிங்கிலங்கள் உண்டு.
- மாற்றான் தோட்டத்திற்கு மனம் இருக்கும் சரி , உன் தந்தைக்கு மனம்
இருக்குமா ?

பல வசனங்கள் இன்றைய நடைமுறைக்கு ஒத்து வருகிறது.
இயக்கம் ரமான்னா - அவ்வளவு தான் .
பித்தர்களாக இருக்கும் மனிதனை மாற்றும் பித்தன் - புதுமைப் பித்தன்.
இயக்கம் ரமான்னா - அவ்வளவு தான் .
பித்தர்களாக இருக்கும் மனிதனை மாற்றும் பித்தன் - புதுமைப் பித்தன்.