குறிச்சொற்கள்

சமூகம் (35) மொக்கை (27) அரசியல் (17) சிரிப்பு (9) கதை (7) காதல் (6) அம்மா (5) கந்தசாமி (5) சினிமா (5) இளையராஜா (4) கருத்து (4) சரக்கு (4) டாஸ்மாக் (4) தி மு க (4) நம்பிக்கை (4) 18+ (3) கட்டுரை (3) கணக்கு (3) குடிமகன் (3) பதிவர்கள் (3) மனிதன் (3) மனைவி (3) விஜய் (3) sms மொக்கை (2) அஞ்சா நெஞ்சன் (2) அனுபவம் (2) ஆன்மிகம் (2) ஈழம் (2) உணவு (2) கருணாநிதி (2) கலை (2) கல்யாணம் (2) கார்டூன் (2) சச்சின் (2) சர்தாஜி (2) சுஜாதா (2) தகவல் (2) தனுஷ் (2) நஸ்ரியா (2) நீதி (2) நேரம் (2) நையாண்டி (2) பஞ்ச் (2) பணம் (2) பவர் ஸ்டார் (2) போராட்டம் (2) மக்கள் (2) மது (2) மதுரை (2) ராஜா (2) வாழ்க்கை (2) வெற்றி (2) + 15 (1) A B C D (1) ATM (1) SMS தத்துவங்கள் (1) meenakshi amman (1) sujatha (1) அ தி மு க (1) அகிலன் (1) அஜித் (1) அஞ்சலி (1) அடாவடி (1) அதிர்ச்சி (1) அனுஷ்கா anusk (1) அன்பு (1) அப்பா (1) அம்பானி (1) அறிதான படங்கள் (1) அலம்பு (1) அழகிகள் (1) அழகு (1) ஆயுள் காப்பிடு (1) இன்டர்நெட் (1) இளைய தளபதி (1) இளையராஜா - வைரமுத்து (1) உடல் நலம் (1) ஓஷோ (1) கணக்கு புதிர்கள் (1) கணக்கு விளையாட்டுகள் (1) கணக்குப் புதிர் (1) கணித விளையாட்டு (1) காமெடி (1) கூகுள் (1) கோபம் (1) சங்கவை (1) சமூகம் கதை (1) சமூகம் மொக்கை (1) சமூகள் ஏமாற்றம் . (1) சாப்பாடு (1) சாமி (1) தத்துவம் (1) தலைக்கவசம் (1) நதியா (1) பதிவு (1) பரமார்த்த குரு (1) பிரபல பதிவர் (1) பையன் (1) மஜா கதைகள் (1) மரண முத்துக்கள் (1) மரண மொக்கை (1) ரஜினி பஞ்ச (1) வயது 18 (1)

Friday 29 March 2013

வெங்காயப் பதிவர்களுக்கு .......

வணக்கம்


இது முழுக்க முழுக்க sms ல் வந்தது. சிலவற்றை பதிவர்களின் நலன் ? கருதி மாற்றியுள்ளேன் . பொருத்தருள்க. ஏற்கனவே sms தத்துவங்கள்  எனும் பதிவை பலர் பார்த்து ? படித்து மகிழ்ந்து போனதால் , மறுபடியும் sms ல் இருந்து சில மொக்கைகள் .


மொக்கைக்கு முன்னாடி ஒரு கேள்வி 

சப்போஸ் உங்க போட்டோவை தொலைந்து போய் , யார் கையிலாவது கிடைச்சா என்ன நினைப்பாங்க . தெரிஞ்சுக்க 1 - 9 வரை ஏதாவது ஒரு நம்பரை செலக்ட் பண்ணுங்க. விடை பதிவின் கடைசியில் .


இப்போ மொக்கை 


நம்ம பதிவர்கள் எல்லாம் வெங்காயம் மாதிரி , ஏன் தெரியமா , கட் பண்ணி  பாருங்க  கண்ணு கலங்கும் . முடியல்லையா ? என்னாலையும் தான் , கவலைப் படாதிங்க , இந்தப் பதிவை எல்லா வெங்காயம் பதிவர்களுக்கும் லிங்க் கொடுங்க . 



மொக்கை 2


அதிக நேரம் உங்க  அழகை கண்ணாடியில் பார்க்கதிங்க 

உங்க  அழகை பார்த்த கண்ணடிக்கும் உங்கள்  மேல் காதல் வந்து விடும் 

இன்னும் நெறைய ஜோக்ஸ் இருக்கு அடுத்த பதிவுகளில் சொல்றேன்.


மொக்கை 3


பிகர் இல்லன்ன காலேஜ் வேஸ்ட் 

சுகர் இல்லன்ன காபி வேஸ்ட் 

லவ் இல்லன்ன லைப் வேஸ்ட் 

மூன் இல்லன்ன நைட் வேஸ்ட் 

என்ன்ன மாதிரி இல்லன்ன வண்டலூர் ஜு வேஸ்ட் 


இப்போ முதல் கேள்விக்கு பதில் . எந்த எண்ணை நினைத்திருந்தாலும் அந்த எண்ணின் பலனை தெரிந்துக் கொள்ளுங்கள் . விடையை பார்த்தப் பிறகு , வேறு எண்களை மாற்றி போங்கு ஆட்டம் ஆடக் கூடாது. 



1. ஐ லவ் யூ 

2. மை ட்ரீம் 

3. மூஞ்ச பாரு காக்க மாதிரி 

4. ஸ்வீட் 

5. என்ன அழகு 

6. யு ஆர் மைன் 

7. நைஸ் கேரக்டர் 

8. ஐ மிஸ் யூ 

9. வெறி கியூட் 


மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

நட்பு முறையில் சிதம்பரத்தை சந்திதேன் - சர்தாஜி அழகிரி

வணக்கம்


வெளியே வந்தாலும் வெளிச்சம் இன்னும் போகலை என்கிற நித்யாவின் பொன்மொழி போல் , அப்பா வெளியே வந்தாலும் அண்ணன் இன்னும் வெளியே வரவில்லை போல சிதம்பரத்தை சந்தித்தது நட்பு ரீதியிலாம் . என்னத்த சொல்றது . வடிவேலு ஒரு படத்தில் பிகரை வெரட்டிட்டு போவாரு. அதை நாயகனின் டீம் கண்டுபிடுக்கும் . அந்த மாதிரி ஒரு சர்தாஜி ஜோக் ஒன்னு உண்டு . அநேகம் பேரு படிச்சது தான் . அந்த ஜோக் இவர்களுக்குத் தான் சரியாய் பொருந்தும். என்ன சொன்னாலும் நாங்க நம்புறது ரொம்ப கஷ்டம் தான்.






சர்தார்ஜி: “இந்த சின்ன டி.வியை வாங்கலாம்னு இருக்கேன். என்ன விலை?”

கடைக்காரர்: “சர்தார்ஜிக்கு நாங்க விக்கிறதில்லை”

அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய சர்தார்ஜி, தன் தலையில் கட்டியிருந்த டர்பனை அவிழ்த்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு மறுபடி கடைக்குப் போய

சர்தார்ஜி: இந்த சின்ன டி.வி வேணும். என்ன விலை?” என்றார். கடைக்காரர் மறுபடி அதே பதில் சொல்ல , 

மீண்டும் வீட்டுக்கு வந்தார் சர்தார்ஜி. தாடியை எடுத்துவிட்டு, வேறு ஹேர்ஸ்டைல் மாற்றிக் கொண்டு, வேறு உடையில் மீண்டும் அதே கடைக்குப் போய் அதையே கேட்டார்.

 கடைக்காரரிடம் இந்த முறையும் அதே பதில்.

சர்தார்ஜி: “அதெப்படி ஒவ்வொரு முறையும் நான் சர்தார்னு கண்டுபிடிச்சீங்க?” அப்பாவியாகக் கேட்டார் சர்தார்ஜி.

கடைக்காரர்: “ஏன்னா இது டி.வி இல்லை. மைக்ரோவேவ் “



 மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா 

Wednesday 27 March 2013

இலங்கைக்கு வந்தா ரத்தம் - தமிழனுக்கு வந்தா தக்காளி சட்னியா ?

வணக்கம்


போராட்டம் வேறு திசையில் , அதே நேரத்தில் சரியான பாதையில் போவது போல் தெரிகிறது.நான் குறிப்பிடுவது ஐ பி எல் கிரிக்கெட்டில் இலங்கை விளையாட்டு வீரர்களை ஆட அனுமதிக்க கூடாது என்பதற்கு ஒரு மித்த ஆதரவு கிடைத்துள்ளது . ஆனாலும் சில பிரபலங்கள் விளையாட்டை விளையாட்டாய் தான் பார்க்க வேண்டும் என தங்களின் கருத்தை முன் வைக்கின்றனர். அது அவர்களின் கருத்தாய் இருக்கட்டும். 


ஒரு செய்தியை இணையத்தில் பார்த்தபோது பகிர்ந்துக் கொள்ளத்தோன்றியது.



இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் ஆட அனுமதி மறுப்பு, வட இந்திய ஊடகங்களிலும் வட இந்தியர்களின் பேஸ்புக் டிவிட்டர் பக்கங்களில் விமர்சனத்துக்குள்ளாகிய தமிழர்கள்.
சென்னை கிங்ஸ் அணி இலங்கை வீரர்களை வைத்து ஆடப்போவதில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.
தமிழர்களின் இந்த எதிர்ப்பை பொலிட்டிக்கல் ரேசிசம் என்றும் ரீஜினல் சாவனிசம் என்றும் விமர்சிக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமாம், விளையாட்டில் அரசியலை கலக்க கூடாதாம் என்றெல்லாம் இலங்கைக்கு வக்காலத்து வாங்கி வேதம் ஓதும் இவர்கள் தான் பாக்கிஸ்தான் வீரர்களை ஐபிஎல் லில் சேர்க்காமலும் பாகிஸ்தானோடு  பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமலும் தேசபக்தியை காண்பிப்பவர்கள்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா

Tuesday 26 March 2013

நட்பு முறையில் சிதம்பரத்தை சந்திதேன் - சர்தாஜி அழகிரி


வணக்கம்


வெளியே வந்தாலும் வெளிச்சம் இன்னும் போகலை என்கிற நித்யாவின் பொன்மொழி போல் , அப்பா வெளியே வந்தாலும் அண்ணன் இன்னும் வெளியே வரவில்லை போல சிதம்பரத்தை சந்தித்தது நட்பு ரீதியிலாம் . என்னத்த சொல்றது . வடிவேலு ஒரு படத்தில் பிகரை வெரட்டிட்டு போவாரு. அதை நாயகனின் டீம் கண்டுபிடுக்கும் . அந்த மாதிரி ஒரு சர்தாஜி ஜோக் ஒன்னு உண்டு . அநேகம் பேரு படிச்சது தான் . அந்த ஜோக் இவர்களுக்குத் தான் சரியாய் பொருந்தும். என்ன சொன்னாலும் நாங்க நம்புறது ரொம்ப கஷ்டம் தான்.






சர்தார்ஜி: “இந்த சின்ன டி.வியை வாங்கலாம்னு இருக்கேன். என்ன விலை?”

கடைக்காரர்: “சர்தார்ஜிக்கு நாங்க விக்கிறதில்லை”

அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய சர்தார்ஜி, தன் தலையில் கட்டியிருந்த டர்பனை அவிழ்த்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு மறுபடி கடைக்குப் போய

சர்தார்ஜி: இந்த சின்ன டி.வி வேணும். என்ன விலை?” என்றார். கடைக்காரர் மறுபடி அதே பதில் சொல்ல , 

மீண்டும் வீட்டுக்கு வந்தார் சர்தார்ஜி. தாடியை எடுத்துவிட்டு, வேறு ஹேர்ஸ்டைல் மாற்றிக் கொண்டு, வேறு உடையில் மீண்டும் அதே கடைக்குப் போய் அதையே கேட்டார்.

 கடைக்காரரிடம் இந்த முறையும் அதே பதில்.

சர்தார்ஜி: “அதெப்படி ஒவ்வொரு முறையும் நான் சர்தார்னு கண்டுபிடிச்சீங்க?” அப்பாவியாகக் கேட்டார் சர்தார்ஜி.

கடைக்காரர்: “ஏன்னா இது டி.வி இல்லை. மைக்ரோவேவ் “



 மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா  

Thursday 21 March 2013

ஜெனீவா ஒப்பந்தம் என்றால் என்ன ? போராட்டத்தை அலட்சியம் செய்பவர்களுக்கு

 வணக்கம்

ஜெனீவா ஒப்பந்தம் , ஜெனீவா ஒப்பந்தம் அப்படின்னு வட்டம் , சதுரம் , செவ்வகம் , ஆரம்பிச்சு உலக தலைவர் வரைக்கும்  ( இதில நம்ம நாட்டு அப்பாடக்கர்களும் உண்டு ) இது நாள் வரைக்கும் இது பற்றி ஒரு மண்ணும் தெரியாம ( விளக்கம்மா யாரு சொல்லி இருக்காக ) அதனுடைய சரத்தை நண்பர் அன்பு ரத்தினம் ( முக நூல் நண்பர் ) சொல்லி இருந்தார் . அவருக்கு நன்றி . இதனை படிப்பவர்கள் கண்டிப்பாய் அனைவரிடமும் கொண்டு போய் சேருங்கள் . போரின் உக்கிரம் புரியும்.



ஜெனீவா ஒப்பந்தம் என்றால் என்ன?
Articles 51 and 54 - இல் உள்ளவை:








* பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு, ஏவுகணை தாக்குதல், குண்டு வீச்சி போன்ற தாக்குதல்கள்.

* பொதுமக்களின் உணவு, குடிநீர், மற்றும் உயிர் வாழ தேவையான அத்தியாவசிய பொருட்களை அழித்தல்.

* பொதுமக்களின் இருப்பிடங்கள் மீதான கண்மூடித்தனமாக தாக்குதல்.

* பொதுமக்கள் மீது ரசாயன குண்டு, அனுஆயுத தாக்குதல், கன்னி வெடி தாக்குதல், தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல், பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தி நடத்தபடுகிற தாக்குதல்.

* பொதுமக்களையும் எதிர் இராணுவத்தையும் பிரித்து பாராமல் ஒட்டுமொத்தமாக கண்மூடித்தனமாக அழிப்பது என்பது "போர் குற்றம்", இந்த செயலுக்கு காரணமானவர்கள் போர் குற்றவாளிகள்!

ஜெனீவா ஒப்பந்தத்தின்படி அதற்கு ஆதரவு அளித்து கையெதிட்ட உலகநாடுகள் ஒப்பந்தத்தை மீறும்பட்சத்தில் போர்குற்றங்கள் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.







 

மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா


Tuesday 19 March 2013

தி மு க விலகியது - M P க்கள் விலகல் எப்போது - போராட்டத்தில் இசைஞானி

வணக்கம்


ஒரு வழியாய் தி மு க மத்திய அரசில் அங்கம் வகிப்பதில் இருந்து விலகி விட்டது . இணையத்தில் மகிழ்ச்சியில் ஒரு பிரிவினர் . காங்கிரசை இனியும் நம்பினால் ஒன்றும் நடக்காது என தெரிந்து இப்போது விலகி விட்டது என்று ஒரு பிரிவினரும் தங்களின் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.எது எப்படியோ நடக்க வேண்டியது நடந்து விட்டது இது மாணவர் போராட்டத்தில் கிடைத்த முதல் வெற்றியாக எடுத்து கொண்டாடுவோம் 


இனி அடுத்து அணைத்து M P களும் தமிழ் இன உணர்வோடு பதவி விலகினால் வெற்றியை மிக விரைவாய் பெற்று விடலாம் . 


மாணவர் போராட்டக் களத்தில் இசைஞானி இளையராஜா கலந்துக் கொண்டு தன்னுடைய ஆதரவினை தெரிவித்தார்.




மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா ,

Monday 18 March 2013

சின்ன சின்ன படம் - பெரிய பெரிய விஷயம்

வணக்கம்


நண்பர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல். மிகவும் ரசிக்கத்தகுந்த வகையில் இருந்தது. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்கிற நோக்கில் இந்தப் பதிவு . ( இன்னைக்கு ஒரு பதிவு தேத்தியாச்சு .) இதில எங்க நகைச்சுவை இருக்கு .



















































மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

Saturday 16 March 2013

இந்த புகைப்படத்தை பார்த்த பிறகாவது - திருந்தட்டும் ராஜபக்ஷே

வணக்கம்



இந்தப் புகைப்படமே வியட்நாம் போருக்கு வித்திட்டது.   இதனை பார்த்த பிறகாவது நிறுத்தட்டும் படுகொலைகளை , திருந்தட்டும் ராஜபக்ஷே மற்றும் கூட்டாளிகள்.







மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா

இது கதையல்ல வாழ்க்கை


 வணக்கம் 

 இந்தக் கதையின் கடைசி பாராவின் வரிகளை எனக்கும் , என்னைப் போன்ற மனிதர்களுக்கும்.




ஜப்பானில் நடந்த உண்மை கதை...!

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.

அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்கானித்து கொண்டு இருந்தார்

சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.

ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.

ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...

உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலக்கட்டத்தில் உணவளிக்க முடியாதா,உன் தாரம் ஊணமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா. சிந்திப்பீர் மனிதர்களே...!

நன்றி : Ilayaraja Dentist


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  

Friday 15 March 2013

அங்க என்னடா சத்தம் - சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா

வணக்கம்



படிச்ச , பார்த்த , கேட்ட மொக்கையை போட்டு நாளாச்சு . நீ  சீரியசா போடற பதிவை காட்டிலும் இந்த மாதிரி போடுற பதிவு தான் கொஞ்சம் நல்லா இருக்குன்னு உங்களுடைய மைண்ட் வாய்ஸ் கேட்க்குது . சரி வாங்க பதிவுக்குள் போகலாம் .

---------------------------------------------------------------------------------------------------------------------------------

நம்ம கந்தசாமி மெடிக்கல் ஷாப் போனாரு. நல்ல காண்டம் ஒன்னு வாங்கி முதலாளியப்பார்த்து சிரிச்சுட்டுப் போனாரு. அடுத்த நாள் வந்தார் . அதே மாதிரி ஒன்னு வாங்கினார் . சிரிச்சார் .போனார் . மறு நாள் , அதற்கடுத்த நாள் என இப்படியே வந்து போனார். முதலாளி பையனை கூப்பிட்டு , ஏண்டா வாங்கின பிறகு என்னப் பார்த்து சிரிச்சுட்டு போறார். அவரு  எங்க போறாரு எனப் பார்க்க சொன்னார். பையனும் போயி பார்த்தன் . வாங்கின கந்தசாமி நேரா முதலாளி வீட்டுக்கு போனாரு.




--------------------------------------------------------------------------------------------------------------------------------


கந்தசாமி பூ வாங்கினாரு . கந்தசாமி நண்பன் அவர்கிட்ட தினமும் பூ வாங்கிட்டு போறே , பொண்டாட்டி மேல அவ்வளவு பிரியமா ? அதுக்கு கந்தசாமி பிரியம் பொண்டாட்டி மேல கிடையாது ,பூக்காரி மேல.




--------------------------------------------------------------------------------------------------------------------------------

விக்கிபீடியா: "எனக்கு எல்லாம் தெரியும்"
ஃபேஸ்புக் : "எனக்கு எல்லாரையும் தெரியும்"
கூகுள் : "என்கிட்டதான் எல்லாமே இருக்கு"
இன்டர்நெட் : "நான் இல்லன்னா மூணு பேரும் அம்பேல்தான்"

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி : "அங்க என்னடா சத்தம்?"

மூவரும் சேர்ந்து : "சும்மா பேசிகிட்டு இருந்தோம் மாமா..




-------------------------------------------------------------------------------------------------------------------------------- 



மீண்டும் சிரிப்போம் 
அவனி சிவா 

Thursday 14 March 2013

அகிலத்தில் ஒரே ஒரு பவர் ஸ்டார் தான் - யாரும் முயற்சி செய்யக்கூடாது

வணக்கம்


ஒரு மனுஷன் எவ்வளவு கஷ்டப்பட்டு , அந்த கஷ்டத்தை கூட இஷ்டப்பட்டு தண்ணி மாதிரி பணம் செலவழிச்சு, தண்ணியை பணம் மாதிரி செலவழிச்சு முன்னுக்கு வந்தா எத்தனை பேருக்கு ஆசை வருது - பவர் ஸ்டார் மாதிரி உருவெடுக்க .



கொஞ்சம் பிளாஷ் பேக் போங்க . லத்திகா அப்படின்னு ஒரு படம் . வந்தது ரெகுலரா தினத்தந்தி பார்க்கிற ஆட்களுக்கே தெரியாது. ஆனாலும் அப்படிப்பட்ட நிலமை வந்தபோதும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் படத்தை ஒரு வருசத்துக்கு ஓட்டினார் ? ஒடிச்சு ? அதுக்கு பிறகு தொடர்ச்சியா பல படங்களுக்கு பூஜா போட்டு பத்திரிக்கைக்கு பணம் வர வழி செஞ்சார் . இவரின் வளர்ச்சியை பார்த்து பட்டம் கொண்ட நடிகர்கள் எல்லாம் பயம் கொண்டார்கள் . இவரை பரிகாசம் செய்வதா நெனைச்சு விஜய் டிவி அவரை அழைத்து பணம் சம்ம்பாதிக்க வழி பார்த்தது . அந்த நிகழ்ச்சியிலும் பவர் பொறுமை அவரின் ட்ரேட் மார்க் சிரிப்பை கொண்டு அதனை எல்லாம் சின்ன்னபின்னமாய் மாற்றினார். 

 பிறகு அவர் எங்கெங்கோ போனார் என்பதும் அவருக்கு அவர் சொன்னது போலவே தமிழ் நாட்டில் அவரின் ரசிகர்கள் கூடிப் போனார்கள். பவரின் வெற்றி சாதாரணமானது கிடையாது. ஜனரஞ்சிக பத்திரிக்கை முதல் இலக்கிய பத்திரிக்கை வரை அவரை பற்றி கட்டுரை எழுத துவங்கியது.



இதனை எல்லாம் புரித்துக் கொள்ளாமல் சிலர் வருகிறார்கள் . சிலர் வந்தும் போனார்கள் .


வந்து போனவர்கள் .


இவர் இப்ப பாராளு மன்ற பிரதிநிதி 




இப்ப இவர் மாஸ் ஸ்டார் 





இன்னும் நிறைய பேர் இருந்தாலும்  , இனி மேல் வந்து பவர் ஸ்டார்க்கு போட்டியாக ஒருவர் வருகிறார். ஒரு நல்ல படம் ஒன்றை இயக்கினார் . பிறகு தேவயானியை கரம் பிடித்தார். இப்போ நம்மளை மிரட்ட வருகிறார்.








இதோடு பதிவ நிறுத்தி விடலாம் . இவங்க எப்பதான் நிப்பாடுவாங்க . 


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 



Tuesday 12 March 2013

இளையராஜாவிற்கு முன் இளையராஜாவிற்கு பின் - ராஜா ராஜா தான்

 வணக்கம்







இசை ரசிகர்களுக்கும் , இளையாராஜா ரசிகர்களுக்கும் இந்த தகவலை பகிர்ந்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி . பலருக்கு தெரிந்த விஷயம் தான் CNN - IBN தொலைக்காட்சி நிறுவனம் கடந்த 100 ஆண்டுகளின் திரைப்பட வரலாற்றில் சிறந்த நடிகர்கள் , நடிகைகள் , இசை அமைப்பாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஒரு சர்வே எடுத்து வழங்கியுள்ளனர். அதில் இந்திய அளவில் மிகச்சிறந்த இசை அமைப்பாளர் வரிசையில் ராஜா முதலிடத்தை பெற்றுள்ளார்.மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் , இந்திய திரைப்பட வரலாறு என்றாலும், அதிலும் குறிப்பாக இசை சம்மந்த பட்ட விஷயம் என்றால் ஹிந்தி , ஹிந்தி என்று தான் வட மாநில பத்திரிக்கையும் , தொலைக்காட்சியும் மார்தட்டும். ஆனால் அவர்களும் ராஜாவிற்கு வாக்களித்து வெற்றியை கொண்டாடி உள்ளனர். 


இந்திய அளவில் பல இசை அமைப்பாளர்கள் எல்லா மொழிகளிலும் இருந்தாலும் , அனைத்து இன , மொழி , மக்களால் கொண்டாடப் படுபவர். நேற்றைய காலங்களிலும்,இன்றைய காலாங்களிலும் , நாளைய காலங்களிலும் இசை அமைப்பாளர்கள் வந்தாலும் ராஜாவின் பாதிப்பு காண்டிப்பாய் இருக்கும்.





இனி இசையை பொருத்தமட்டில் இளையராஜாவிற்கு முன் , இளையராஜைர்க்கு பின் என்றே குறிப்பிடப்படும் . மீண்டும் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்கிறேன்.



மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா  ,



Monday 11 March 2013

நீதியை மீண்டும் நிரூபணம் செய்த நீதிபதி






சென்னை ஐகோர்ட் நீதிபதி சந்துரு, நேற்று ஓய்வு பெற்றார். அதற்கு முன், சொத்து விவரங்களை, தலைமை நீதிபதியிடம் அளித்தார். மின்சார ரயிலில், வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். சக வழக்கறிஞர்கள், அவரை, வழியனுப்பி வைத்தனர்.கடந்த, 2006ம் ஆண்டு, ஐகோர்ட் நீதிபதியாக சந்துரு நியமிக்கப்பட்டார். 62 வயது பூர்த்தியாவதைத் தொடர்ந்து, நேற்று அவர் ஓய்வு பெற்றார். 80 மாதங்களில், 96 ஆயிரம் மனுக்கள் மீது, உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.



நேற்று காலையில், ஐகோர்ட்டுக்கு வந்த உடன், பதிவுத்துறையிடம் காரை ஒப்படைத்தார். பின், கோர்ட் ஹாலில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார். வழக்கறிஞர்கள், நேற்று கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இருந்தாலும், அவர் முன் பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகளை விசாரித்தார். பிற்பகலிலும், கோர்ட் ஹாலில் அமர்ந்து வழக்குகளை விசாரித்தார்.பிரிவு உபசார நிகழ்ச்சி எதுவும் வேண்டாம் என, அவர் மறுத்து விட்டதால், அவரது சேம்பரில், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.



வழக்கு விசாரணையை முடித்து விட்டு, மாலையில், சேம்பருக்கு திரும்பினார். அப்போதும், திரளாக வழக்கறிஞர்கள் கூடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.சேம்பருக்கு வரும் முன், தலைமை நீதிபதி அகர்வாலை, அவரது அறையில் சந்தித்தார். தனது சொத்து விவர பட்டியலை, தலைமை நீதிபதியிடம் அளித்தார். பின், சேம்பருக்கு வந்தார். கருப்பு கோட், கவுனை கழற்றி விட்டு, கதர் சட்டை, வேஷ்டி உடன், சேம்பரில் இருந்து புறப்பட்டார். வழக்கறிஞர்கள் ஏராளமானோர், அவருடன் வந்தனர்.பத்திரிகை நிருபர்கள் அறைக்கு, நீதிபதி சந்துரு வந்தார். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பின், அவரது சக வழக்கறிஞர்கள் நண்பர்களுடன், பாரிமுனையில் உள்ள ஒரு ஓட்டலில், காபி குடித்து விட்டு, கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்தார். ஏற்கனவே, "சீசன் பாஸ்' வாங்கி வைத்திருந்தார். ரயிலில் புறப்பட்டு, வீட்டுக்கு சென்றார்.


நிருபர்களின் கேள்விகளுக்கு, நீதிபதி சந்துரு அளித்த பதில்:


கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில், வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது. இதனால், அவர்களது கட்சிக்காரர்கள் தான் பாதிக்கப்படுவர். அதேபோல், அடிக்கடி "வாய்தா' வாங்கக் கூடாது. வழக்கறிஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வர வேண்டும்.எனது கடமையை ஆற்றியதில், நான் திருப்தி அடைகிறேன்.



சுப்ரீம் கோர்ட்டில், "பிராக்டீஸ்' செய்ய போவதில்லை. ஒரு வழக்கறிஞராக, பொது வாழ்வில் ஈடுபடுவேன். சமூகப் பிரச்னைகளுக்கு போராடுவேன். அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை.நீதிபதிகள் நியமனம், வெளிப்படையாக நடக்க வேண்டும். ஏற்கனவே நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, ஆண்டு தோறும், சொத்துக் கணக்கை, தலைமை நீதிபதியிடம், மற்ற நீதிபதிகள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு, நீதிபதி சந்துரு கூறினார்.



இந்த மாதத்துக்குள் அரசு பங்களாவை, காலி செய்து விட்டு, தனது சொந்த "பிளாட்'டில் குடியேறுகிறார். புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்காக, நண்பர்களுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ஏப்., 1 முதல், தனது குடியிருப்பு, என, அபிராமபுரம் வீட்டு முகவரியை குறிப்பிட்டுள்ளார்.


மீண்டும் சிந்திப்போம் 
அவனி 

Saturday 9 March 2013

கமெண்ட் போடாதவங்க ரத்தம் கக்கியா சாவாங்க ?



 வணக்கம்


கலியுகம் போய் வலையுகம் வந்தாலும் , கலியுக காலத்திற்கு முன்னிலிருந்து ஏதோ ஒரு வடிவத்தில் ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன் , ஒரு நோட்டீஸ் விநியோகம் செய்யப்படும் .அதில் இதை படித்தவர்கள் , இதே போல் நூறு நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்யவேண்டும்.இதனை உதாசீனப் படுத்தினால் சில நாட்களில் ஒரு  கெட்டக் காரியம் ஒன்று நடக்கும் என்று எச்சரிக்கை மணி வேறு.நாற்பதை நெருங்கிய நண்பர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.அதற்க்கு அடுத்த தலை முறைக்கு மொபைலில் இது போல , இதனை இத்தனை பேருக்கு farward செய்ய வேண்டும் என்று.இது இன்றும் நின்ற பாடில்லை . இது வேறு மாதிரி ,காலத்திற்கு ஏற்ற மாற்றம் .  முகப்புதகத்தில் ஒரு செய்தி போடுவார்களாம் . அதற்க்கு நாம் கமெண்ட் போட வேண்டும்.போடாத பட்சத்தில் .......




 இதோ என் முகப்புதகத்தில் வந்த செய்தி .......



 இது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்

கண்டமன்னூர் பக்கத்தில் உள்ள காரமடை கோவிலில் சாமி கும்பிட சென்ற தம்பதியினர் கோவில் வளாகத்தில் இரண்டு மாத குழந்தையை வைத்துவிட்டு சாப்பிட்டு கைகழுவி விட்டு பார்த்த அந்த தம்பதியினர் அதிர்ச்சியில் உறைந்தனர், அங்கு அந்த கோவிலுக்கு சொந்தமான பாம்பும் , அந்த இரண்டு மாத குழந்தையும் பேசிக்கொண்டு இருந்தனர், இவர்கள் வருவதை பார்த்த அந்த பாம்பு இவர்களிடம் 


"இப்பொழுது நீங்கள் பார்த்த விஷயத்தை ஸ்டேடஸ்-ஆ போடுங்க, அதை படிப்பவர்கள் லைக் போட்டு சேர் செய்யவேண்டும் அப்படி செய்தால் லைக், சேர் செய்த 15 நாட்களில் அவர்கள் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்" என்று சொல்லி அந்த பாம்பு மறைந்து விட்டது.....


உடனடியாக அந்த தம்பதியினர் ஸ்டேடஸ் போட்டனர், அவர்கள் போட்டு 12 நாட்களில் அவர்களுக்கு சொந்தமான வீட்டின் மீது இருந்த கேஸ் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது
இதை படித்து விட்டு லைக் ,சேர் செய்யாமல் அலட்சியபடுத்திய பட்டுகோட்டையை சேர்த்த பரந்தாமன் 2 நாட்களில் ரத்தம் கக்கி செத்தான்.



மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா     

Thursday 7 March 2013

அம்மா முதல் மன்மோகன் வரை ( அனைத்து தலைவர்களும் உண்டு )

  வணக்கம் 
இவர்கள் இப்படிதான் இருக்கிறார்கள் போலும் .படித்த உடன் பதிவு போட எண்ணினேன் போட்டு விட்டேன்.படித்துப் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும்.
 
குனிந்து நின்னு கும்பிடுபவருக்கு எல்லாம் அமைச்சர் பதவி கொடுத்தா அது அம்மா...
குஷ்புவிற்கு மேடையிலும் உண்மையான தொண்டனுக்கு இதயத்திலும் இடம் கொடுத்தால் அது தலிவர்...
தொண்டர்களுக்கு தர்ம அடி கொடுத்து நாயே! நாயே! என திட்டினால் அது கேப்டன்...
டாஸ்மார்க் வாசலில் பூட்டுடன் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் சாதி சான்றிதழ் கேட்டால் அது மருத்துவர் ஐயா...!
தன் பிறந்த நாளுக்காக தொண்டர்களிடம் தங்கக் காசு கேட்டு நச்சரித்தால் அவர் திருமா...


வயிற்று வலி வந்தவனையும் வாந்தி,பேதியில் கிடப்பவனையும் வாக்கிங் கூட்டிக்கொண்டு போனால் அது வைகோ...


பாம்புக்கும் நோகாமல் குச்சிக்கும் வலிக்காமல் அரசியல் செய்வதுபோல் நடித்தால் அது தா.பாண்டியன்...


இவர் ஜெயித்தாரா? தோத்தாரா? என தெரியும் முன்பே கப்பை தூக்கிக்கொண்டு ஓடினால் அது ப.சிதம்பரம்...

தமிழ் பெண்களின் தாலியை அறுப்பதை முழு நேர தொழிலாகவும் வெளிநாட்டுக்காரனுக்கு நாட்டை கூறு போட்டு விற்பதை பார்ட் டைம் ஆகவும் செய்தால் அது சோனியா காந்தி...


சத்தமே இல்லாம சமாதி கட்டுறது எப்படின்னு யோசிச்சா அது நரேந்திர மோடி..


"சப்பாணி என யார் கூப்பிட்டாலும் அவுங்க கண்ணத்துல சப்புனு அடிச்சிடு" என புரோகிராம் செய்யப்பட்டும் அமைதியாக இருக்கும் ஹியூமனாய்டு ரோபோ மன்மோகன் சிங்...


MLA ஆனதை மறந்துவிட்டு ஈமு கோழி விளம்பரத்திலும், பனியன், ஜட்டி விளம்பரத்திலும் நடித்துக் கொண்டிருந்தால் அது சரத்குமார்...


கோயில் மணியை அடிப்பதுபோல் போகிறவன்,வருகிறவன் எல்லாம் அடித்திவிட்டு போனால் அது மதுரை ஆதீனம்...


மக்களும், பத்திரிக்கைகளும் பல முறை காறி உமிழ்ந்தாலும் 'அது போன மாசம், இது இந்த மாசம்' என்றபடியே 15 நாளில் கூடங்குளம் திறக்கப்படும் என்று பேட்டி கொடுத்தால் அது நாராயண சாமி.. :)
 
 
  மீண்டும் சிந்திப்போம்
அவனி சிவா  
 

Wednesday 6 March 2013

நாய் பொழைப்பு ?

வணக்கம்  


பேசுபவனின் குரல் எவ்வளவுக்கெவ்வளவு உயருகிறதோ.. அவ்வளவுகவ்வளவு.. பொய் பேசுகிறான் என்று அர்த்தம்

தலைப்பு பற்றி உடனே செய்தி முடிஞ்சது இந்தப் பதிவு தான் . ( இது உலக சாதனைக்கு பரிந்துரைக்கலாம் .) இப்போ வேற மேட்டர் . இது உண்மை தானா ?





----------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்போ ஒரு உண்மை

ஒரு திறமையான காவல்காரரின் உள் நிச்சயம் ஒரு திறமையான திருடன் இருப்பான்


எப்பூடி 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------


மறுபடியும் ஒரு படம் இது எனக்கு சரியா பொருந்தும் . நாய்ப் பொழைப்பு 




 
வேற என்ன 

மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா 

Tuesday 5 March 2013

எந்தந்த நாள் என்ன தினம் - தெரிஞ்சிக்கலாம்



வணக்கம்

நமக்கு நம்மோளோட பிறந்த தினம் , பொண்டாட்டி , பழைய காதலி , டாஸ்மாக் மூடும் தினம் , தீபாவளி,பொங்கல் அரசு விடுமுறை நாட்கள் என பலது நாம தெரிஞ்சிக்க ஆசைபடாம இருந்தாலும் நமக்கு தெரிஞ்சுரும்.இது உலகம் முழுக்க கொண்டாடப் படும் சில தினங்கள் .அவசியம் தெரிந்துக்கொள்ளவேண்டியது.சில தினங்கள் தேவை இல்லாமலும் இருக்கலாம் .வாங்க தெரிஞ்சுக்கலாம்.




பிப்ரவரி 14, காதலர் தினம்‌
பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்

மார்ச் 2, உலக புத்தக தினம்
மார்ச் 8, உலக மகளிர் தினம்
மார்ச் 22, உலக தண்ணீர் தினம்

ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22, உலக பூமி தினம்
ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்
மே 1, உழைப்பாளர் தினம்
மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்
மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்
மே 15, உலக குடும்பங்கள் தினம்
மே 18, உலக அருங்காட்சியக தினம்
மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்
ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்
ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்

செப்டம்பர் 21, உலக அமைதி தினம்
செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்

அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்
அக்டோபர் 16, உலக உணவு தினம்

நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்
நவம்பர் 16, உலக பொறுமை தினம்
நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்
நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்

டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்




மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா  

Monday 4 March 2013

இப்படிதான் விவாகரத்து நடக்குதோ ?



வணக்கம்




நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய ஒரு தகவல் ? படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க.

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.



“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.




“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”


மீண்டும் சிந்திப்போம் 
அவனி சிவா